28 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த கமலின் இந்தியன் 2 படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
528
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான கமலஹாசன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், ராகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்தியன் 2 படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய சுதந்திர வீரர்களில் ஒருவர் சேனாதிபதி. இவர் நேதாஜியின் படையில் முக்கிய நபராக இருந்தவர். இவருக்கு சந்துரு, கஸ்தூரி என இரண்டு பிள்ளைகள். இதில் மூத்த மகன் சந்துரு லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் அரசாங்க வேலையில் சேர நினைக்கிறார். இதை அவருடைய தந்தை சேனாதிபதி கண்டிக்கிறார். இதனால் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்று விடுகிறார் சந்துரு. இதற்கிடையில் திடீரென நடக்கும் விபத்தில் கஸ்தூரி நெருப்பில் சிக்கி இறந்து விடுகிறார்.

- Advertisement -

மருத்துவமனையில் லஞ்சம் கொடுத்ததால் பார்ப்பேன் என்று மருத்துவர்கள் சொல்வதால் சேனாதிபதிக்கும் மருத்துவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. இதனால் அவருடைய மகள் இறந்து விடுகிறார். இனி தமிழ்நாட்டில் லஞ்சம் என்ற வார்த்தையை கேட்கக் கூடாது என்று தவறு செய்யும் அதிகாரிகளை வதம் செய்கிறார் சேனாதிபதி. இதனால் இந்தியன் தாத்தாவாக அவர் அவதாரம் எடுக்கிறார். கடைசியில் இவரின் மகன் லஞ்சம் வாங்குவதால் அவரையும் கொலை செய்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். மீண்டும் தவறு நடந்தால் இந்தியன் வருவான் என்று எச்சரித்து விட்டு செல்கிறார்.

தற்போது இரண்டாம் பாகத்தில் சித்தார்த் மற்றும் அவருடைய நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜெகன் ஆகியோர் இணைந்து சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்கிறார்கள். இதற்காக அவர்கள் போராடவும் செய்கிறார்கள். சித்தார்த் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்து கொண்டிருக்கிறார். இருந்தும் ஒரு கட்டத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது, இந்தியன் தாத்தா தான் வரவேண்டும் என்று முடிவெடுக்கிறார். இதற்காக இவர் இந்தியனை தேடும் பயணத்திலும் இறங்குகிறார்.

-விளம்பரம்-

மேலும், ‘கம்பேக் இந்தியன்’ என்ற டேகை சோசியல் மீடியாவில் வைரலாக்கி நடக்கும் லஞ்சம் ஊழல் போன்ற விஷயங்களை சேனாதிபதிக்கு தெரிவிக்கும் வகையில் செய்கிறார். உலகில் ஒரு மூலையில் இருக்கும் இந்தியனுக்கு இந்த விஷயம் தெரியவருகிறது. கடைசியில் அவர் தைவானில் இருந்து மீண்டும் இந்தியா செல்ல நினைக்கிறார். இந்தியாவிற்கு 28 ஆண்டுகள் கழித்து வரும் சேனாதிபதியை கைது செய்ய வீரசேகரன் என்ற போலீஸ் அலைந்து கொண்டிருக்கிறார். லஞ்சம் ஊழல் செய்பவர்களை விட்டு வைக்கக் கூடாது என்று சேனாதிபதி மீண்டும் அவதாரம் எடுக்கிறார்.

படத்தின் கதை:

இதனால் சேனாதிபதி என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? குற்றவாளிகளை தண்டித்தாரா? கடைசியில் என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதி கதை. கமலஹாசன் நடிப்பை சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு காட்சியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. முதல் பாகத்தில் தமிழ்நாட்டில் நடந்த லஞ்சம் ஊழலை இயக்குனர் காட்டி இருந்தாலும் இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுக்க நடக்கும் லஞ்சத்தை பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார். இவரை அடுத்து படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, ஜெகன் ஆகியோருடைய நடிப்பு நன்றாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் எஸ்.ஜே.சூர்யா சில நிமிடங்கள் படத்தில் வந்து செல்கிறார். அவருடைய காட்சிகள் அடுத்த பாக்கத்தில் வரும் என்று கூறப்படுகிறது. சமுதாயத்தை சரி செய்து சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற கதையை தான் இயக்குனர் காண்பித்திருக்கிறார். இருந்தாலும் படம் பெரிய அளவு வெற்றியடையவில்லை. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கமலஹாசன் படத்தில் காண்பிக்கப்படும் விஷயங்கள் அனைத்தும் தேசப்பற்றுடன் இருந்தாலும் 2கே கிட்ஸ் மத்தியில் கொண்டு போய் சேரவில்லை.

காரணம், அட்வைஸ் செய்தாலே பூமர் பூமர் என்று சொல்பவர்களுக்கு இந்தியன் தாத்தாவாக அவர் சொல்வதெல்லாம் கிரிஞ்சாக தான் இருக்கும். படத்தில் விஎஃப்எக்ஸ் காட்சிகள் பிரமாண்டமாக இருக்கிறது. கிளைமாக்ஸ், சண்டைக் காட்சிகள், மேக்கப் என அனைத்தையும் பக்காவாக இயக்குனர் செய்திருக்கிறார். அனிருத்தின் இசை நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு, கலை இயக்கம் எல்லாமே படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. இருந்தாலுமே படம் சுமாராகத்தான் இருக்கிறது. ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நிறை:

கமலஹாசன் நடிப்பு சிறப்பு

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு நன்றாக இருக்கிறது

ஒளிப்பதிவு, பின்னணி இசை, கலை இயக்கம், பிஎஃப்எக்ஸ் என அனைத்து டெக்னிக்கல் விஷயங்களும் நன்றாக இருக்கிறது.

குறை:

படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்

தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு ஏற்றவாறு கதையை கொண்டு சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் இந்தியன் 2 – விறுவிறுப்பு குறைவு

Advertisement