வாய்ஸ் சரியில்லை என வாய்ப்பை இழந்த கமல் – எந்த படம் தெரியுமா ? பின் நடித்தது யார் பாருங்க.

0
1011
- Advertisement -

வாய்ஸ் சரியில்லாமல் பட வாய்ப்பை கமல் இழந்திருந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் 1970 களிலேயே சினிமாவில் நடிக்கத் துவங்கி தற்போது இந்திய அளவில் மிக பிரபலமான நடிகராக வளர்ந்திருக்கிறார். இரண்டு வயதிலேயே சினிமாவுக்குள் வந்த கமல் 60 ஆண்டுகளாக சினிமா துறையில் நடித்து கொண்டு இருக்கிறார். மேலும், இந்திய அளவில் ஐந்து மொழிகளில் நடித்து ஐந்து மொழிகளிலும் பிலிம்பேர் விருது வாங்கிய ஒரே நடிகர் கமல். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

இயக்குனர் பாலச்சந்திரனால் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட கமல் இன்று இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடன இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என அனைத்து துறைகளிலுமே சிறந்து விளங்குகிறார். இவருடைய பல படங்கள் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : பலூன் பைட்டை ரஜினி தான் வைக்க சொன்னார்’ – அப்போ இது என்ன சார். Ks ரவிக்குமாரின் பழைய வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் கேள்வி.

விக்ரம் படம்:

அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள். மேலும், இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இப்படி உலகம் முழுவதும் பிரபலமான நாயகனாக திகழ்ந்து கொண்டு இருக்கும் கமலஹாசன் ஒரு காலத்தில் வாய்ஸ் சரியில்லாமல் பட வாய்ப்பை இழந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. கமலஹாசன் அவர்கள் 1960 களிலேயே குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். இவர் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

-விளம்பரம்-

கமலின் திரைப்பயணம்:

பின் இளைஞனாக வளர்ந்த பிறகு அவரை தேடி வாய்ப்புகள் சரியாக வரவில்லை. அதனால் நடிப்பின் மீது அவருக்கு ஈடுபாடும் பெரிதாக இல்லை. அது மட்டுமில்லாமல் அவர் நடனம் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அப்போது திரையுலகில் நடன இயக்குனராக தங்கப்பன் மாஸ்டர் தான் உச்சத்தில் இருந்தார். அவரிடம் உதவியாளராக தான் கமலஹாசன் பணியாற்றி இருந்தார். மாஸ்டர் சொல்லித்தரும் செட்ப்புகளை நட்சத்திரங்களுக்கு விலக்கி சொல்லி தருவது தான் கமலின் வேலை. இதனால் திரை உலகில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு அவரை நன்றாக தெரியும். அப்போது கேஎஸ் பாலகிருஷ்ணனின் குறத்தி மகன் என்ற படம் உருவானது.

குறத்தி மகன் படம்:

இந்த படத்தில் சந்திரபாபு, பத்மினி, சிவகுமார், வெண்ணிற ஆடை நிர்மலா என பலர் நடித்திருந்தார்கள். படம் உருவாகி விநியோகஸ்தர்களுக்கு படம் திரையிட்டு காட்டினர். ஆனால், படம் யாருக்கும் பிடிக்கவில்லை. குறவர்களை மையப்படுத்தி படம் எடுத்ததால் பெரிய அளவு ஓடாது என்று வருத்தப்பட்டனர். பின் குறத்தி மகனை வைத்து கதை தொடரலாம் என்று நினைத்தார்கள். அதற்குள் பத்மினி திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அதற்கு பிறகுதான் ஜெமினி கணேசன், கே ஆர் விஜயா வைத்து படமெடுக்க ஆரம்பித்து இருந்தார்கள். குறத்தி மகன் வேடத்தில் முதலில் யாரை நடிக்க வைப்பது என்று குழப்பத்தில் இருந்தார்கள்.

வாய்ஸ் சரியில்லாமல் வாய்ப்பை இழந்த கமல்:

அப்போதுதான் கமலைப் பற்றி இயக்குனருக்கு ஞாபகம் வந்தது. படத்தில் அந்த கதாபாத்திரம் படபடவென பேச வேண்டும். அதற்காக கமலை பேச சொன்னார்கள். ஆனால், கமலுடைய வாய்ஸ் பிடிக்கவில்லை என்பதால் அவரை நிராகரித்து விட்டு ஸ்ரீதர் தேர்வானார். பின் அந்த படத்திலேயே ஒரு சின்ன கதாபாத்திரத்தில் கமலை நடிக்க வைத்து இருந்தார்கள். அந்த படத்தில் மொத்தம் கமல் நான்கைந்து காட்சிகளில் மட்டுமே வந்து இருப்பார். இப்படி பல படங்களில் பெரிய அளவு பேசப்படாத கதாபாத்திரங்களில் கமல் நடித்திருந்தார். அதற்குப் பின்தான் பாலச்சந்திரனின் அரங்கேற்றம் படத்தில் கமல் நடித்தார். தற்போது சினிமாவுலகில் விஸ்வரூபமெடுத்து திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement