‘பலூன் பைட்டை ரஜினி தான் வைக்க சொன்னார்’ – அப்போ இது என்ன சார். Ks ரவிக்குமாரின் பழைய வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் கேள்வி.

0
521
ksravikumar
- Advertisement -

லிங்கா பட கிளைமாக்ஸை ரஜினிகாந்த் மாற்றிவிட்டார் என்று கே.எஸ்.ரவிக்குமார் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரமிக்க வைக்கும் பல பிரமாதமான படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் கே. எஸ். ரவிகுமார். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் குமார், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி இருக்கிறார். அதோடு இவரை சீனியர் டைரக்டர் என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-

இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப் பெரிய சாதனை படைத்து இருக்கிறது. மேலும், இவர் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பார். இது வழக்கமான ஒன்றாக கே. எஸ். ரவிகுமார் வைத்து உள்ளார். மேலும், கே. எஸ். ரவிகுமார் அவர்கள் முதன் முதலில் இயக்குனர் விக்ரமன் இடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு தான் இவர் புரியாத புதிர் பிறகு படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : மீண்டும் பார்ட்டி, சர்ச்சையை ஏற்படுத்திய ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் வீடியோ. ரசிகர்கள் ஆதரவு குரல்.

லிங்கா படம்:

அந்த வகையில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் லிங்கா. இந்த படத்தில் ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஷெட்டி, சந்தானம், ராதாரவி, விஜயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இந்த படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் லிங்கா படம் குறித்து அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அளித்த பேட்டி:

அதாவது, லிங்கா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எங்க யாருக்குமே பிடிக்கல. அந்த பலூன் காட்சியை நாங்கள் வைக்கவில்லை. படத்தின் பாடல் காட்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது இடையில் கொஞ்சம் பிரேக் கிடைத்தது. அப்போது ரஜினிகாந்த் அவர்கள் படத்தினுடைய காட்சிகளை போட்டு காண்பிக்க சொன்னார். உடனே நான் நிறைய கட் பண்ண வேண்டியிருக்கிறது. இளமை ரஜினிகாந்த் காண்பிக்க வேண்டும் என்று சொன்னேன். அவர், இந்த படத்திற்கு லிங்கா தானே ஹீரோ. அதனால் இளமை காட்சியை கம்மியாக காண்பியுங்கள்.

லிங்கா கிளைமேக்ஸ்:

லிங்கா கதாபாத்திரத்தை அதிகமாக காண்பியுங்கள் என்று சொன்னார். இதையெல்லாம் என்னுடைய அசிஸ்டன்ட் இயக்குனருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் நாங்கள் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்தோம். அதுமட்டுமில்லாமல் அந்த பலூன் காட்சியே முதலில் இல்லை. பின் என்னென்னவோ பண்ணி அந்த கிளைமாக்ஸ் காட்சி வந்தது. ஆனால், எங்களுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. அதே போல் கிளைமாக்ஸ் காட்சியும் மக்கள் மத்தியில் பெரிய அளவு பேசப்படவில்லை.

Ks ரவிக்குமாரின் வேறு வீடியோ :

அப்பதான் நான் சங்கர் மாதிரி இருக்கணும் என்று நினைத்துக்கொண்டேன். ஏன் என்றால் அவர் முதல் பாதி எடுத்துவிட்டு அவருக்கு பிடித்திருந்தால் மட்டுமே வைத்துக் கொள்வார். இல்லை என்றால் திருப்பியும் காட்சிகளை எடுப்பார் என்று லிங்கா பட அனுபவத்தை பற்றி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் அந்த காட்சியை தான் வைத்ததாக வேறு ஒரு பேட்டியில் கே எஸ் ரவிகுமாரே பேசிய வீடியோவை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து ‘அப்போ இது என்ன சார்’ என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Advertisement