மகாராஜா படத்தின் இயக்குனரின் திறமையை அன்றே கணித்த கமல் – இதோ வீடியோ

0
213
- Advertisement -

மகாராஜா பட இயக்குனரை கமல்ஹாசன் புகழ்ந்து பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘மகாராஜா’. இந்த படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், முனிஷ்காந்த், சிங்கம் புலி, அனுராக் காஷ்யப், அபிராமி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தில் விஜய் சேதுபதி, தன் வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை, திருடி விட்டார்கள் என்று போலீசில் புகார் அளிக்கிறார். லக்ஷ்மி என்றால் செல்வம் என்று அர்த்தம். பின் போலீஸ் எந்த செல்வத்தை காணவில்லை என்று கேட்கிறார்கள்.

- Advertisement -

மகாராஜா படம்:

விஜய் சேதுபதி தன்னுடைய லட்சுமியை குறித்து சொல்கிறார். அதைக் கேட்டு மொத்த போலீஸுக்குமே கோபம் வருகிறது. அதன் பின் விஜய் சேதுபதியை அடித்து விரட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் தன்னுடைய லட்சுமியை கண்டுபிடித்து கொடுத்தால் 5 லட்சம் தருகிறேன் என்று விஜய் சேதுபதி போலீஸ் இடம் சொல்கிறார். ஐந்து ரூபாய்க்கு கூட தேராத ஒரு பொருளை இவ்வளவு விலை கொடுத்து இவன் தேட காரணம் என்ற என்று எல்லோருக்குமே சந்தேகம் வருகிறது.

படத்தின் கதை:

பின் எல்லோருமே அந்த பொருளை தேட ஆர்வம் காட்டுகிறார்கள். இறுதியில் திருடு போன லட்சுமி என்ன? அந்த பொருளுக்கு விஜய் சேதுபதி ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்? அதை கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெறுவது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை வாரி குவித்து வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

நித்திலன் குறித்த தகவல்:

இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் குறித்து கமல் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு பாரதிராஜா நடித்த குரங்கு படத்தின் மூலம் தான் நித்திலன் இயக்குனர் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றிருந்தது. இதற்கு முன் இவர் நாளைய இயக்குனரின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தையும் வாங்கியிருந்தார். இந்த விருதை அவருக்கு உலகநாயகன் கமலஹாசன் மற்றும் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் தான் வழங்கி இருந்தார்கள்.

கமல் சொன்ன விஷயம்:

அப்போது நிகழ்ச்சியில் கமலஹாசன், நித்திலன் இயக்கிய ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ குறும்படத்தை பாராட்டி பேசி இருந்தார். தற்போது அந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதில், எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் இந்த இளைஞர் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது என்று கூறியிருந்தார். மேலும், இந்த படத்தை பார்த்து திரை பிரபலங்கள், இயக்குனர்கள் பலருமே பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement