மனோரமாவை பயமுறுத்திய கமலின் சிவராத்திரி துக்கமேது பாடல்- என்ன ஆச்சுன்னு நீங்களே பாருங்க

0
885
manoramma
- Advertisement -

இந்திய சினிமா உலகில் மிகச் சிறந்த பழம் பெரும் நடிகை மனோரமா. திரையுலகினராலும், ரசிகர்களாலும் “ஆச்சி” என அழைக்கப்பட்டார். நடிகை மனோரமா அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடிகை மன்னார் குடியில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் கோபி சாந்தா. சிறு வயதில் இருந்தே நாடக துறையில் இருந்தார். நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் தான் இவருக்கு “மனோரமா” எனப் பெயர் சூட்டினர். ஆரம்பத்தில் இவர் “வைரம் நாடக சபா” நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து உள்ளார். அதற்கு பிறகு இவர் மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் தான் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Actress Manorama Sad Family Flash Back And Love Story

பின் இவர் பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தார். மேலும், இவர் தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் போன்ற பல விருதுகளை தன்னுடைய நடிப்புத் திறமைக்கு வாங்கி உள்ளார். இவர் இதுவரை 1500க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார். இதனால் இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது. அதோடு நடிகை மனோரமா தமிழ் மொழி மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள பல மொழி படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவருடைய நடிப்பால் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தவர். ஆண்களுக்கு இணையாக தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்தவர் நடிகை மனோரமா என்று சொல்லலாம்.

- Advertisement -

மைக்கேல் மதன காமராஜன் படம்:

இப்படி சினிமா வாழ்க்கையில் கொடி கட்டி பறந்த மனோரமாவை கமலஹாசனின் சிவராத்திரி தூக்கமேது என்ற பாடல் பயமுறுத்திய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 1990ஆம் ஆண்டு கமலின் மைக்கேல் மதன காமராஜன் என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் கமல் வித்தியாசமான நான்கு வேடங்களில் நடித்திருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் மாறுபட்ட கோணத்தில் இருந்க்கும். மைக்கேலாக வரும் கமல் கிரிமினல் கதாபாத்திரம். இவருக்கு மட்டும் படத்தில் ஜோடி கிடையாது. தீயணைப்பு துறையில் வேலை செய்யும் ராஜா.

படத்தில் கமலின் கதாபாத்திரம்:

இவருக்கு ஜோடி குஷ்பு. பணக்காரன் மதனுக்கு ஜோடி ரூபிணி. அப்பாவி பாலக்காட்டு அயர் காமேஸ்வரன் ஜோடி ஊர்வசி. ஒவ்வொருவரின் குணத்திற்கு ஏற்ப பாடல்களைப் போட்டு இளையராஜா அசத்தி இருப்பார். அந்த வகையில் படத்தில் பணக்காரனாக வரும் மதன் கமலுக்கு சிவராத்திரி தூக்கமேது என்ற பாடலை இளையராஜா இசை அமைத்திருந்தார். இதில் மனோரமா கங்காபாய் என்ற நாடக நடிகையாக வருவார். இவருக்கு கணவர் இல்லை,. இவரது ஒரே மகளாக ஜக்குபாய் என்ற கதாபாத்திரத்தில் ரூபினி நடித்திருப்பார். இவரும் நாடக நடிகை. மூவருமே ஒரே இடத்தில் தங்குமாறு சூழல் ஏற்படுகிறது.

-விளம்பரம்-

மனோரமா-கமல்-ரூபிணி நடித்த காட்சி:

அப்போது பணக்காரன் மதனை எப்படியாவது தன்னுடைய மகளுக்கு மணமுடித்து வைக்க வேண்டும் என்று மனோரமா திட்டம் போடுகிறார். அந்த நேரத்தில் தான் சிவராத்திரி தூக்கமேது என்ற பாடல் வருகிறது. இதில் கமலும், ரூபினியும் மிக நெருக்கமாக நடித்து இருப்பார்கள். இதில் ஒவ்வொரு காட்சியிலும் மனோரமா கூட இருந்து தன்னுடைய மகளுக்கு ஒவ்வொரு நளினத்தையும் சொல்லிக் கொடுப்பார். சொல்லப்போனால் இந்த பாடலில் கமல் காமதேவன் ஆகவே மாறி நடித்து இருப்பார் என்று சொல்லலாம். அதிலும் பாடல் நடுவில் கமல் மோதிரம் அணிவித்து ரூபிணியை கந்தர்வ திருமணம் செய்து தன்னுடைய லீலைகளை தொடர்வார்.

மனோரமாவை பயமுறுத்திய காட்சி:

வில்லங்கமான கதாபாத்திரத்தில் பயங்கர கவர்ச்சி காட்சிகளில் நெருக்கமாக கமல் – ரூபினி நடித்து இருப்பார்கள். அதோடு இருவரும் நெருக்கமாக இருக்கும் பல காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மனோரமா அதிர்ந்து பயந்துவிட்டார். பின் தம்பி ரொம்ப தப்பா இருக்கிற மாதிரி இருக்கு. இதனால் தன் பெயர் கெட்டுப் போய் விடும் என்று பயந்து மனோரமா இயக்குனரிடம் சொன்னார். அதற்கு பிறகுதான் இந்த பாடலில் இருந்த ரொம்ப நெருக்கமான கவர்ச்சி காட்சிகளை குறைத்து அதற்கு பிறகு எடுக்கப்பட்டது தான் திரையில் வெளியிடப்பட்டது. அப்போதே இந்த பாடல் படு பேமஸ். மேலும், இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் மெருகு குலையாமல் வரவேற்கப்படுகிறது. இளையராஜாவின் இசையும், கமலின் நவரச நடனத்தை தரக்கூடிய நடிகர் இன்றும் யாரும் இல்லை என்று சொல்லலாம்.

Advertisement