தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கமல். கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் தக் லைஃப். இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கியிருக்கிறார். 38 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் கூட்டணியில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலுமே வெளியாகி இருக்கிறது.

உலகம் முழுவதும் சுமார் 2200 திரையரங்குக்கு மேல் இந்த படம் வெளியாகி இருந்தது. இருந்தாலுமே முதல் நாளே இந்த படம் படும் மோசமான விமர்சனங்களை தான் குவித்தது. கமல் ரசிகர்களே இந்த படத்தை திட்டி இருந்தார்கள். இந்த படம் இந்தியன் 2வை விட மோசமாக இருப்பதாக ட்ரோல் செய்து வருகிறார்கள். இதுவரை இந்த படம் 50 கோடி வசூல் கூட செய்யவில்லை. இதற்கிடையில் கடந்த சில வாரங்களாக கமலின் கன்னட மொழி சர்ச்சை தான் பூகம்பமாக வெடித்து கொண்டு இருக்கிறது. தக் லைப் படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் சிவராஜ் குமாரை பார்த்து கமல், உயிரே உறவே தமிழே.
தக் லைப் படம்:
உங்களுடைய பாசை தமிழில் இருந்து வந்தது. எனவே முதல் வரி உங்களையும் சேர்த்தது என்று கூறி இருந்தார். இப்படி கமலஹாசன் பேசியிருந்த விஷயம் தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ‘ காரணம், தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று அவர் கூறியிருப்பார். இதனால் கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் வெடித்திருக்கிறது. கன்னட ரக்ஷனா வேதிகே உள்ளிட்ட பால் கன்னட இயக்கங்கள் கமலின் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து எச்சரிக்கை விட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் கன்னட அமைப்புகள் தக் லைப் படத்தினுடைய போஸ்டர்களையும் கிழித்து இருந்திருக்கிறார்கள்.

கர்நாடக சர்ச்சை:
இதை அடுத்து கமலஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு கமலஹாசன் தரப்பில் விளக்கம் அல்லது மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் அவருடைய படங்களை புறக்கணிக்க போகிறோம் என்று கூறி இருந்தார்கள். இதை அடுத்து கமலின் தக் லைப் படம் வெளியிட மாட்டோம் என்று கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் கூறப்பட்டது. பின் கமல் அவர்கள் தன்னுடைய ராஜ்கமல் பின் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பின் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா நீதிபதி, மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சனை முடிந்திருக்கும் என்றார்கள். ஆனால், கமல் தரப்பில் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறப்பட்டது.
நீதிபதி உத்தரவு:
அதற்கு பின் கமல் தரப்பில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்தார்கள். விசாரணையில் நீதிபதி, கர்நாடக நீதிமன்றத்தை வெளுத்து வாங்கி இருந்தது. இதை அடுத்து கர்நாடகாவில் தக் லைப் படத்தை போலீஸ் பாதுகாப்புடன் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விநியோகஸ்தர் வெங்கடேஷ் கமலாகரின், கன்னட மொழி குறித்து கமலஹாசன் சொன்னது கன்னட மக்கள் மனதை புண்படுத்திருக்கிறது. இப்போது படத்தை வெளியிடுவது எந்த புண்ணியம் இல்லை.

விநியோகஸ்தர் சொன்னது:
இந்த படத்தை இப்போது ரீச் செய்வது நல்ல வியாபாரம் முடிவும் கிடையாது. இதற்கு முன்பு கமல் நடித்த இந்தியன் 2 படமும் கர்நாடகாவில் சரியாக ஓடவில்லை. 2022 ஆம் ஆண்டில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் தான் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. அவருடைய படத்தை கண்மூடித்தனமாக பார்க்கும் ரசிகர்கள் யாரும் கர்நாடகாவில் கிடையாது. அவருடைய படம் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை பொறுத்து தான். தக் லைப் மோசமான விமர்சனங்களை பெற்று வருவதால் இந்த படம் கர்நாடகாவில் வரவேற்பு பெறுவது என்பது சிக்கலான விஷயம் தான் என்று கூறி இருக்கிறார்.






