கமல் எவ்வளவோ கெஞ்சியும் ‘தேவர் மகன்’ படத்தில் சிவாஜி ரோலில் நடிக்க மறுத்த நடிகர், கமலே சொன்ன தகவல் – எந்த நடிகருன்னு தெரியுமா?

0
861
kamal
- Advertisement -

தனது படத்தில் நடிக்குமாறு கமல் கெஞ்சியும் முடியாது என்று மறுத்த நடிகர் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் சின்னத்திரை பிரபலங்களான ஷிவானி நாராயணன் மற்றும் மைனா நந்தினி நடித்திருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விக்ரம் படம் பற்றிய தகவல்:

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேங் ஸ்டாராக மிரட்டி இருக்கிறார். ஜெயிலில் இருக்கும் விஜய் சேதுபதியை காப்பாற்ற பகத் பாசில் முயற்சி செய்கிறார். இவர்களின் திட்டத்தை புரிந்து கொண்ட கமல் அவர்களின் முயற்சியை முறியடிக்க போராடுகிறார். இதனால் அடுத்தடுத்து நடக்கும் ஆக்ஷன் தான் படத்தின் கதை. சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல வெளியாகி இருந்தது. இந்த பாடலை கமல் எழுதி பாடி இருந்தார். அதுவும் இந்த பாடலை சென்னை தமிழில் பாடி இருந்தார்.

விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி:

இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. அதோடு இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமலின் விக்ரம் படம் அமைந்திருக்கிறது. மேலும், மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியிட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.

-விளம்பரம்-

கமல் அளித்த பேட்டி:

நடந்த முடிந்த விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் விழாவை விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்திருந்தார்கள். சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போது கமலஹாசன் தன் படத்தில் நடிக்க கேட்டு மறுத்த நடிகர் குறித்த தகவலை கூறியிருக்கிறார். அதில் அவர், கடந்த 1992-ஆம் ஆண்டு கமலஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி உட்பட பல நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த படம் தேவர் மகன். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்தது.

கமல் படத்தில் நடிக்க மறுத்த நடிகர்:

அப்போது இந்த படத்தில் சிவாஜிகணேசன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் இடம் கமலஹாசன் ஆலோசனை செய்து இருந்தார். ஆனால், கமலஹாசன் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் நடிப்பதில்லை என்றும் தன்னுடைய முடிவை மாற்ற முடியாது என்றும் திலீப்குமார் கூறியதாக கமலஹாசன் கூறியிருந்தார். இதனை அடுத்து வேறு வழியின்றி அந்த கதாபாத்திரத்தில் அம்ப்ரிஷ்புரி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement