நாங்கள் தோற்றுவிட்டோம் ! எங்களை மன்னித்துவிடு ஆசிஃபா …. !

0
1098
Actor kamal

ஜம்மு-காஷ்மீரில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமி ஆசிஃபாவுக்கு, நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிஃபா, கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி காணாமல்போனார். இதையடுத்து, ஜனவரி 17-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். ஆசிஃபா கடத்தப்பட்டு, மயக்கமருந்து கொடுத்து, கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்தது.

இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், `மனிதர்களாகத் தோற்றுவிட்டோம்’ என்று கருத்துப் பதிவுசெய்தார்.

இந்தச் சம்பவம்குறித்து இன்று ட்வீட் செய்துள்ள நடிகர் கமல், `ஆசிஃபாவுக்கு நேர்ந்த இந்தச் கொடுமை, ஒரு தந்தையாக, மனிதராக, இந்த நாட்டின் குடிமகனாக என்னை கோவப்படவைக்கிறது. மன்னித்துவிடு ஆசிஃபா… இந்த நாட்டில் நீ வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் நாங்கள் தவறிவிட்டோம். எதிர்காலத்தில் உன்னைப் போன்ற குழந்தைகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும், அவர்களின் நீதிக்காகவும் போராடுவேன். உன்னை மறக்க முடியாது’ என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.