இந்தியன் 2 கமலின் கடைசி படமா.! விளக்கமளிக்கிறார் கமலின் இயக்குனர்.!

0
535
indian-2
- Advertisement -

உலக நாயகன் கமல் தற்போது சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று இருந்து வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதயயடுத்து தேவர் மகன் 2 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கபட்டது.

-விளம்பரம்-

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கமலிடம் ‘தேவர் மகன்’ தான் கடைசி படமா என்று கேள்வி கேட்க்கப்பட்டது. அப்போது பேசிய கமல்,அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை இல்லை என்று கூறியிருந்தார்.

- Advertisement -

அதே போல கமல், இந்தியன் 2 விற்கு பிறகு நடிக்க போவது இல்லை. அதனால் இந்தியன் 2விற்கு பின்னர் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார் என்று குறுபட்டது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ளார் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா.

இயக்குனர் ராஜேஷ் செல்வா, கமலின் ‘தூங்காவனம்’ படத்தை இயக்கியவர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர், கமல் அவர்கள் சினிமாவில் இருந்து விலக போகிறார் என்பது தவறான செய்தி. அவர் நடிக்கவில்லை என்றாலும் அவர் சினிமா துறையில் தான் இருப்பார். அவரை ஒரு கதாசிரியராகவாவது இருக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement