Bigg Boss Tamil : பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறுவதாக கமல் வெளியிட்ட அறிக்கை. இது தான் காரணமாம்.

0
457
kamal
- Advertisement -

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேறுவதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இது குறித்து கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, கோவிட் பெருந்தொற்று பரவலும் அதனை அடுத்து வந்த லாக்டவுன் விதிமுறைகளும் ஒவ்வொருவரின் மனதிலும் திட்டங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தயாரிப்புப் பணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. பிக்பாஸ் நிகழ்ச்சி என் மனதிற்கு உகந்த நான் விரும்பி செய்கிற ஒன்று. விக்ரம் பணிகள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டு செயல்பட்டு வந்தோம்.

-விளம்பரம்-

கோவிட் பெருந்தொற்று என்னையும் தாக்கியபோது மருத்துவமனையிலிருந்து கூட போட்டியாளர்களையும், ரசிகர்களையும் நான் சந்தித்தேன். பின் குணமடைந்த மறுநாளே நிகழ்ச்சியில் தொடர்ந்தேன். பிக் பாஸ் சீசன் 5 வழக்கம் போல சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சி முதன் முறையாக தமிழில் ஓடிடி டிஜிட்டல் அவதாரம் எடுத்த போது அந்த மாற்றத்தை வரவேற்று முன்னெடுக்கும் பெருமை எனக்குக் கிடைத்தது. புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வேண்டும், மக்களை மகிழ்விக்க கிடைக்கும் எந்த சிறிய வாய்ப்பையும் தவற விடக்கூடாது எனும் என் உத்வேகத்திற்கு பிக்பாஸ் அல்டிமேட் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.

- Advertisement -

விக்ரம் படத்தால் ஏற்கப்பட்ட சிக்கல் :

அவ்வகையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் புரட்சிகரமான மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது. இவர்களோடு இணைந்து புதுமை பாதையில் பயணிப்பது எனக்கு அளவற்ற பெருமிதம் உண்டு. லாக்டவுன் விதிமுறைகளால் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இதன் விளைவாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுங்கி இருந்த தேதிகளும் விக்ரம் படப்பிடிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியதாகிவிட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கும் வரும் சூழலில் என்னோடு பணியாற்றும் பிற முக்கியமான நடிகர்கள்,

ஒப்புக்கொண்ட பணிகள் காத்திருக்கின்றன :

தொழில் நுட்பக் கலைஞர்கள் உடைய தேதிகளையும் மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதால் பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் படம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது. இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களையும் கலைஞர்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் என் சொந்த காரணங்களின் பொருட்டு தாமதிக்க செய்வது நியாயமல்ல. அவர்கள் ஒப்புக்கொண்ட பணிகள் அவர்களுக்காக காத்திருக்கின்றன.

-விளம்பரம்-

20ஆம் தேதி கடைசி எபிசொட் :

ஆகவே வேறு வழியின்றி கனத்த மனதுடன் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி எபிசோட்டிற்கு பிறகு டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்து விட்டது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமான நாள் தொட்டு அதன் அங்கமாக இருந்து ரசிகர்களை சந்தித்து உரையாடி வந்த எனக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த முடிவை எடுப்பதில் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் மிகச் சிறந்த முறையில் என்னோடு ஒத்துழைத்தார்கள்.

சீசன் 6ல் மீண்டும் வருவதாக உறுதி :

இந்த இக்கட்டான தருணத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் விஜய் டிவி நிர்வாகம் எனக்கு அளிக்கும் அன்பும் ஆதரவும் என்னை நிகழ்ச்சி அடைய செய்கின்றன. என்னுடைய விலகல் ஏற்படுத்தும் சிரமங்களுக்கு அவர்களிடமும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இது மிக சிறிய தற்காலிகமான இடைவெளி தான். மிக விரைவில் பிக் பாஸ் சீசன் 6ல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். உங்கள் நான் என்று கமலஹாசன் பதிவிட்டிருக்கிறார். இப்படி கமலின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement