ஜெயா டிவில அவ்வை ஷண்முகி படம் பாத்துட்டு இருக்கீங்களா – அந்த படத்திற்காக முதலில் கமல் போட்ட இளமையான கெட்டப் இதுதான்.

0
116631
avvai

சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். நடிகர் கமலஹாசன் அவர்கள் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து உள்ளார். கமலஹாசன் அவர்கள் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர். இவர் சினிமா திரை உலகில் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார்.

இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால் தான் இவரை உலகநாயகன் என்று அழைக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரிந்தது. கமலஹாசன் அவர்கள் எப்போதும் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான கெட்டப்பில் என்ட்ரி கொடுப்பார். அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “அவ்வை சண்முகி” இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கினார். இந்தப் படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் உட்பட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது ஆகும்.

- Advertisement -

இந்த படம் மிகப் பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் கமலஹாசன் அவர்கள் விவாகரத்து வாங்கிய மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்காகவும், மனைவியை சமாதனம் செய்ய செய்வதற்காகவும் அவர் வீட்டுக்கு பெண் வேடத்தில் சென்றிருப்பார். “அவ்வை சண்முகி” படத்தில் கமல்ஹாசனுக்கு மேக்கப் போட்டவர் மைக்கல் வெஸ்ட்மோர். இவர் அமெரிக்காவின் மிகப் பிரபலமான மேக்கப் ஆர்டிஸ்ட். இவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர். அதோடு பல பிரபலமான நடிகர்கள் எல்லாருக்கும் இவர் தான் மேக்கப் செய்து உள்ளார். இவர் தன்னுடைய மேக்கப் திறமைக்காக பல விருதுகளையும் வாங்கி உள்ளார்.

முதலில் கமலஹாசன் அவருக்கு இளமை வயது உடைய பெண் கெட்டப்பில் தான் மேக்கப் போட்டு விட்டார். ஆனால், கமலஹாசன் அவர்களுக்கு அதில் முழு மனதோடு விருப்பமில்லை. பின்னர் தான் மைக்கல் வெஸ்ட்மோர் அவர்கள் கொஞ்சம் வயதான பெண்ணாக இருக்கும் கெட்டப்பில் மேக்கப் போட்டு விட்டார். இந்த மேக்கப் கமலஹாசனுக்கு மிகவும் பிடித்து விட்டதாம். அதுமட்டும் இல்லாமல் இந்த மேக்-அப் போடுவதற்கு 4 மணி நேரம் ஆகும். ஆனால், படப்பிடிப்பில் 5 மணி நேரம் கூட அந்த மேக்கப் இருக்காதாம், சீக்கிரமாகவே போய்விடுமாம்.

-விளம்பரம்-

தற்போது நியூஸ் என்னவென்றால் கமல்ஹாசன் அவர்கள் அவ்வை சண்முகி படத்திற்கு முதலில் போடப்பட்ட கெட்டப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பார்த்த நெட்டிசன்கள் இணையங்களில் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், கமல்ஹாசன் அவர்கள் இந்த வயதான கெட்டப்பில் தான் அவ்வை சண்முகி அட்ராசிட்டியாக இருந்து உள்ளார் என்று கூறுகிறார்கள். இதுமட்டுமில்லாமல் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப்பில் காட்சியளிப்பார். சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்த தசாவதாரம் படத்தில் கூட பத்து வேடமணிந்து அசத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் மீண்டும் இந்தியன் தாத்தா கெட்டப்பில் நடித்துக் கொண்டு வருகிறார்.

Advertisement