‘சினிமா துறையில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ள வேண்டாம்’ கமல் வைத்த கோரிக்கை. இதான் காரணம்

0
496
Kamal
- Advertisement -

உத்தம வில்லன் பட விவகாரம் தொடர்பாக விழா ஒன்றில் நடிகர் கமலஹாசன் வைத்திருக்கும் கோரிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிறுவனர், திரை உலகின் தந்தை என்று சொல்லப்படும் மறைந்த டி ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

அப்போது விழாவில் கலந்து கொண்ட கமலஹாசன், சினிமா துறையின் உடைய வளர்ச்சிக்கு அதிக பங்காற்றியவர் ராமானுஜம். அதே போல் சினிமாத் துறையில் பிரச்சனைகள், விவாதங்கள் பல வந்தாலுமே ஒருவரை ஒருவர் அதிகமாக திட்டிக் கொள்ள வேண்டாம். இது சினிமாத்துறைக்கு நல்லது கிடையாது என்று கூறியிருக்கிறார். இவர் இப்படி கூறியதற்கு காரணம் உத்தம வில்லன் படம் விவகாரம் தான் என்று நெட்டிசன் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

உத்தம வில்லன் படம்:

கடந்த 2015 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி இருந்த படம் உத்தம வில்லன். இந்த படத்தின் கதை, திரைக்கதையை கமலும், கிரேசி மோகன் இணைந்து எழுதி இருந்தார்கள். ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார். இந்த படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் கமல் உடன் பூஜா குமார், ஊர்வசி, கே. பாலச்சந்தர், நாசர், ஆண்ட்ரியா, ஜெயராம், பார்வதி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

உத்தம வில்லன் பட விவகாரம்:

இந்தப் படத்தில் கமலுடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டிருந்தாலும், விமர்சன ரீதியாக படம் தோல்வியை தான் சந்தித்து இருந்தது. பின் இது குறித்து பேட்டியில் இயக்குனர் லிங்குசாமி, உத்தமவில்லன் படத்தை பண்ண வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும் கமல்ஹாசன் இந்த படத்தை பண்ணுவதில் உறுதியாக இருந்தார். படத்தை எடுத்து முடித்து பின்னர் பார்த்தபோது, படத்தில் நாங்கள் சுட்டிக்காட்டிய பிழைகளை திருத்துவதாக கமல் சொன்னார். ஆனால், கடைசியில் அவர் அப்படியே வெளியிட்டார்.

-விளம்பரம்-

கமல் மீது ரெட் கார்ட்:

இது தான் உத்தம வில்லன் படம் படுதோல்வியை சந்திக்க காரணம் என்று கூறி இருந்தார். மேலும், இதனுடைய நஷ்டத்தை ஈடு செய்வதற்காக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கமலஹாசன் உறுதி அளித்திருந்தார். இருந்தாலும் 9 வருடங்கள் ஆகியும் கமலஹாசன் எந்த படத்திலும் நடிக்கவில்லை, எந்த பதிலும் கொடுக்கவில்லை. இதனால் கமலஹாசன் மீது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ரெட் கார்ட் கொடுத்து இருக்கிறார்கள்.

லிங்குசாமி குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லிங்குசாமி. இவர் முதலில் இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. தமிழில் கடைசியாக இவர் விஷாலின் சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கி இருந்தார். பின் கடந்த ஆண்டு இயக்குனர் லிங்குசாமி அவர்கள் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வெளிவந்த ‘தி வாரியர்’ படத்தை இயக்கினார். இந்த படமும் பெரும் தோல்வியை சந்தித்தது.

Advertisement