பிக் பாஸ் 6 கொடுத்த ஏமாற்றம் – பிக் பாஸுக்கு டாடா சொல்லும் கமல் ? இது தான் காரணமா ?

0
547
kamal
- Advertisement -

தற்போது இந்தியாவில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னோடி நெதர்லாந்த் நாட்டை சேர்ந்த “பிக் பிரதர்” என்ற நிகழ்ச்சி தான். இந்தியாவில் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2006ஆம் ஆண்டு அறிமுகமாகியது. பின்னர் ஹிந்தி பிக் பாஸின் மூன்றவது சீசனில் இருந்து பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பட்ச்சன் தொகுப்பாளராக நிகழ்ச்சியை நடத்தினார். இதனால் இந்த நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பிரபலமடைந்தது. இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகரான சல்மான் கான் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு ஒன்றாகவே தொடங்கியது. மேலும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசனும், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் ஜெ.ஆர் என்டிஆரும் நடத்தினர் பின்னர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடந்து கமலஹாசன் தொகுத்து வழங்க தமிழ் நாடு முழுவதும் நிகழ்ச்சிக்கு ஆதரவு கிடைத்து, மேலும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகை ஓவியா செய்த செயலினால் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று அதிக மக்களை கவர்ந்தது. இப்படியிருக்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களை கடந்த 2 சீசன்களாக முந்திய சீசன்களை விட குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. தெலுங்கு பிக் பாஸிலும் இதே போன்ற நிலைமை தான். கடந்த 18ஆம் தேதிதான் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து எல்வி ரேவந்த் என்பவர் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் ஒரே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்து ஆண்டு நடைபெறும் சீசனில் நடிகர் நாகார்ஜுனா தெலுங்கு பிக் பாஸ் தொகுப்பாளராக இருக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் ஒரே மாதிரியாக பிக் பஸ் நிகழ்ச்சி போய்க் கொண்டிருப்பதினால் மக்களுக்கு இந்த நிகழ்ச்சியும் மீது இருந்த ஆர்வம் போய் விட்டதாக அவர் எண்ணியதால்தான் அடுத்த தெலுங்கு பிக் பாஸ் சீசனில் கலந்து கொள்ள போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-விளம்பரம்-

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி இப்படி போய்க்கொண்டிருக்கும் போது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் குறைவான ரசிகர்களே பார்க்கிறார்கள் என்பதினால் தமிழில் அடுத்த பிக் பாஸ் சீசனில் கமல்ஹசன் பங்குபெறுவது குறித்து யோசித்து வருவதாக கூறப்படுகிறது. என்னதான் கோடிகளை சம்பளமாக கொடுத்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு இல்லையென்றால் கமல்ஹசன் பிக் பாஸில் கலந்து கொள்வது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.

மேலும் கமலஹாசன் அரசியல் வாதி அதோடு தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதனால் இவர் இந்த சீசனோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குட் பாய் சொல்லி விடுவார் என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. ஒரு வேலை அடுத்த சீசனில் கமல் விலகினால் அவருக்கு பதில் யார் பிக் பாஸை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

Advertisement