ரஜினிக்கு முன்பே இந்தியன் படத்தில் கமலுக்கு வெள்ளை மேக்கப் போட்டுள்ள ஷங்கர் – நல்ல வேல இந்த கெட்டப் படத்துல வரல.

0
326
kamal
- Advertisement -

ரஜினிக்கு முன்பே கமலுக்கு சங்கர் வெள்ளை மேக்கப் போட்டிருக்கும் படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம். இதுவரை இவர் 12 படங்களை இயக்கி இருக்கிறார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் கூட நடித்து இருந்தார். பின் ஜென்டில் மேன் படத்தின் மூலம் அறிமுகமான ஷங்கர் தற்போது வரை பல வெற்றிபடங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், சங்கர் இயக்குனராக மட்டுமல்லாமல் சொந்தமாக எஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது சங்கர் அவர்கள் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து இயக்குகிறார். இதற்கு தற்காலிகமாக ‘ராம் சரண் 15’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் எடுக்கப்படுகிறது. இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதுகிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

ஷங்கரின் திரைப்பயணம்:

இப்படி சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை சங்கர் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ஷங்கர், ரஜினியை வைத்து இயக்கிய சிவாஜி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்தில் மிகப்பெரிய ஹைலைட் என்றால் அது ரஜினியை வெளியாக்கியது தான். அதாவது சிவாஜி படத்தில் வரும் ஒரு கூடை சன்லைட் என்ற பாடலுக்கு ரஜினி வெள்ளைக்காரன் போல் இருப்பார். இது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. கருப்பாக இருக்கும் ரஜினியை ஸ்ரேயா திருமணம் செய்ய தொழில்நுட்பம் மூலம் ரஜினியை வெள்ளையாக காண்பித்து இருப்பார்கள்.

கமல் வெள்ளை மேக்கப் போட்ட படம்:

மேலும், இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே இந்த காட்சி குறித்து தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ரஜினிக்கு முன்பே கமலுக்கு ஷங்கர் வெள்ளை மேக்கப் போட்டு இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் உலா வருகிறது. ரஜினிகாந்தின் சிவாஜி படத்துக்கு முன்பு கமலுக்கு வெள்ளை நிறத்தில் சங்கர் மேக்கப் போட்டு போட்டோஷூட் நடத்தியிருந்தார். இது கேட்கும் பலருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கும். ஆனால், இதுதான் உண்மை. கமலஹாசனின் இந்தியன் படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். இந்தியன் படத்தின்போது கமலை வைத்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி இருந்தார் சங்கர்.

இதையும் பாருங்க : விக்ரம் ட்ரைலரில் வரும் இந்த நடிகை யார் தெரியுமா ? அட, மிஸ்கின் படத்தில் கூட நடிச்சிருக்காரே.

-விளம்பரம்-

இந்தியன் படம் குறித்து கூறியது:

அப்போது கதை முழுமை பெறவில்லை. அதனால் சங்கர் நிறைய போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். அதில் ஒன்று தான் கமலுக்கு முழுக்க வெள்ளை நிற மேக்கப் போட்டு படங்கள் எடுத்திருந்தனர். இந்தியன் கதைப்படி ஜனாதிபதி மகனை கொன்று விட்டு கமல் வெளிநாடு செல்வார். அதற்காக இப்படி ஒரு முயற்சி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் எதற்காக கமலுக்கு வெள்ளை மேக்கப் போடப்பட்டது என தெரியவில்லை. அதன்படி கதையில் பல மாற்றங்களை சங்கர் செய்து இருந்தார். முறுக்கிய மீசையுடன் வரும் ஜனாதிபதியாக தான் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை யோசித்திருக்கிறார்கள். அதன்படி கமலை வைத்து வயதான மேக்கப் இல்லாமல் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு இருந்தது.

ரஜினி-கமல் வெள்ளை மேக்கப் படம்:

கடைசியில் வயதான மேக்கப் போட்ட போது மீசை வைக்க வில்லை. மீசை இல்லாமலேயே போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்கள். மேலும், இந்தியன் படத்துக்காக கமலை வைத்து நவ நாகரீக உடையில் நிறைய புகைப்படங்கள் எடுக்கப்பட்து இருந்தது. இந்தியன் பேச்சு நடந்து கொண்டிருந்த போது அவர் மீசை இல்லாமல் குருதிப் புனலில் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இந்தியிலும் மகன் கதாபாத்திரத்தில் மீசையில்லாமல் நடித்தார் கமல். கமல் வெள்ளை மேக்கப் போட்டார். ஆனால், சிவாஜியில் ரஜினியின் வெள்ளை நிறத்தை தொழில்நுட்பத்தில் உருவாக்கி இருந்தார்கள். கமலின் வெள்ளை மேக்கப் பயன்படவில்லை என்றாலும் அந்த அனுபவத்தின் மூலம் சிவாஜியில் ரஜினியை வெள்ளைக்காரர் தோற்றத்தில் காண்பிக்க சங்கருக்கு உதவி இருந்தது.

Advertisement