27 நாள் கால் ஷீட்டுக்கு 7 கோடி சம்பளம் – விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனான பிரபல நடிகர். இவரே மாஸ் ஹீரோ ஆச்சே.

0
2530
vikram
- Advertisement -

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ். அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.

-விளம்பரம்-
Kamal Haasan 232 is Vikram: Guns, knives, swords, and an ageless  Ulaganayagan, Lokesh Kanagaraj- Cinema express

இப்படி ஒரு நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து படம் எடுக்க போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி இருந்து வந்தது. இதற்கிடையில் சூப்பராக ஒரு கதையை ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனிடம் சொல்லி அசத்தி விட்டார் லோகேஷ் கனகராஜ் என்று செய்திகள் வெளியானது. இந்த படம் சூப்பர் ஸ்டாருக்கு 169-வது படமாம். இதில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான கமல் ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் தண்டோராபோடப்பட்டு கொண்டு இருந்தது.

- Advertisement -

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் கமல் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. கமலின் 232 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற அதிராக பூர்வ தகவல் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியானது. இப்படி ஒரு நிலையில் கமலின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த அக்டொபர் 7 ஆம் தேதி வெளியானது. ஆனால், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களை பற்றிய விவரம் வெளியவில்லை.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் வில்லனாக இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக பிரபல சினிமா விமர்சகர்களான வலைப்பேச்சி யூடுயூப் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் 27 நாள் கால் ஷீட் கொடுத்துள்ளதாகவும், அதற்கு சம்பளமாக 7 கோடி கேட்டுள்ளார் என்று கூறி உள்ளனர். மேலும், ஹீரோவாக நடிக்க 20 கோடி வாங்கும் லாரன்ஸ், எப்படி 7 கோடிக்கு இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்று வியப்படைந்தும் உள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement