விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் மகாநதி ஒன்று. இந்தத் தொடரில் நான்கு சகோதரிகளை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. சீரியலில் மூத்த மகள் கங்காவும் இரண்டாவது மகள் காவேரியும், மூன்றாவது மகள் யமுனா, கடைசி மகள் நர்மதா ஆவார்கள். பசுபதி கொடுத்த பிரச்சனையில் காவேரி குடும்பம் சென்னை வந்தது. பின் விஜய்-காவிரி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

பல போராட்டங்களுக்கு பின் விஜய்-காவேரி இருவரும் சேர்ந்து வாழ்கிறர்கள். தற்போது சீரியலில் சந்தானத்திற்கு முத்துமலர் என்ற இன்னொரு குடும்பம் இருப்பதை தெரிந்து சாரதா மனமுடைந்து விடுகிறார்.
முத்துமலர் குடும்பம் சொத்துக்காக பிரச்சனை செய்வதில் நியாயம் இருக்கிறது என்று அறிந்த விஜய், காவேரி இருவரும் அவர்கள் வீட்டிலேயே தங்க வைக்கிறார்கள். அவர்களுக்கு வேலை ஏற்பாடும் செய்து
செய்து தருகிறார்கள். தற்போது காவிரியின் வளைகாப்பு விழா மும்முரமாக நடைபெறுகிறது.
மகாநதி சீரியல்:
இனி அடுத்து என்ன? என்ற பரபரப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த சீரியலில் குமரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் கம்ருதீன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வெளிநாடு செல்வது போல கதையின் டிராக்கை மாற்றி வைத்திருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது. கம்ருதீன் வெளியே வந்தவுடன் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பளம் கிடைக்காது என்றெல்லாம் கூறினார்கள். அது மட்டும் இல்லாமல் மகாநதி சீரியலில் இனி தொடர முடியாது என்றெல்லாம் கூறப்படுகிறது.

சீரியலில் இருந்து விலகல்:
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மகாநதி சீரியல் யூனிட் அளித்த பேட்டியில், மகாநதி சீரியல் கம்ருதீன் நடித்திருந்தார். எங்கள் யூனிட்டில் இருந்து ஒருத்தர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனார் என்பதில் எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் எவ்வளவு நாள் இருப்பாரெல்லாம் எங்களுக்கு யாருக்கும் தெரியாது. அதனால் தான் அவருடைய கதாபாத்திரத்தை தற்காலிகமாக வெளிநாடு போற மாதிரி காட்டி இருந்தோம். அவர் அந்த நிகழ்ச்சியில் நல்லா விளையாடி இருந்ததால் திரும்புவார் என்பதில் வாய்ப்பில்லை என்று எங்களுக்கு தோன்றியது.

கம்ருதீன் பற்றி சொன்னது:
அதனால் தான் சேனல் தரப்பில் டிஸ்கஸ் பண்ணி ஆள் மாற்றிக் கொள்ளலாம் என்று இருந்தோம்.
இருந்தாலும் வேற ஆர்டிஸ்ட் கமிட் செய்யாமல் வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டு இருக்கிற மாதிரியே கதாபாத்திரத்தை முடிக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டது போல மகாநதி சீரியல் இருந்தும் அவரை இப்பத்தான் விலக்கி வைக்கப்பட்டுள்ளார் என்ற ரீதியில் தகவல் வந்தது. உண்மை நிலை இதுதான். ஒரு வேளை மீண்டும் தொடருக்குள் கம்ருதீன் வர வாய்ப்பு இருக்கிறதா? என்பது கதை டிராக்கை பொறுத்துதான் இருக்கிறது. இப்போ வேற மாதிரி கதை சென்று கொண்டிருக்கிறது.
ரெட் கார்டுக்கும் அவர் சீரியல் தற்காலிகமாக நீக்கப்பட்டதிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.






