தங்க வீடு இல்லாமல் தவிக்கும் கமலின் இரண்டாவது மனைவி சரிகா ! உதவிய பிரபல நடிகர்

0
3428
Sarika

உலகநாயகன் கமல் ஹசனின் இரண்டாவது மனைவி சரிகா. இருவரும் 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு சுருதிஹாசன் மற்றும் அக்ஸரா ஹாசன் என இறண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2004ஆம் ஆண்டு சரிகாவிற்கும் கமல்ஹாசனுக்கும் விவாகரத்து ஆனது.
Ameer khan
தற்போது மகள் சுருதிஹாசன் பாலிவுட் நடிகை ஆனதால் மும்பையில் சொந்தமாக அப்பர்ட்மெண்ட் வாங்கியுள்ளார்.
இளையமகள் அக்ஸரா ஹாசன் சரிகாவுடன் கொஞ்ச நாளும், அக்கா சுருதி ஹாசனுடன் கொஞ்ச நாளும் தங்கி வந்தார்.

அதன் பின்னர் சரிகா தனியாக தான் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் சரிகாவின் தாயார் இறந்துவிட்டார். மேலும், இறந்த போது அவர் வாங்கிய மும்பையின் ஜூஹூ பகுதில் உள்ள அபார்ட்மென்ட்டை அவரது உறவினர்களுக்கு எழுதி வைத்து இறந்துவிட்டார்.

அந்த அப்பர்ட்மெண்ட் சரிகாவின் சம்பளத்தில் வாங்கியது. இதனை மீட்க கோர்ட் வாசலில் ஏறி இறங்கி வருகிறார். இன்னும் கேஸ் முடியவில்லை. இந்த நிலையில் தங்குவதற்கு கூட வீடு இல்லாமல் இருந்து வரும் அவருக்கு பாலிவுட் நடிகர் ஆமிர் கான் உதவியுள்ளார்.
சரிகாவும் நடிகர் இம்ரானின் அம்மாவும் நல்ல நண்பர்கள், அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் சரிகாவிற்கு உதவியுள்ளார் அமீர்கான்.