இதனாலதா நான் இறந்த மாதிரி காமிச்சடாங்க – பல வருட சீக்ரெட்டை உடைத்த மோனிஷா.

0
12085
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இளசுகளை டார்கெட் செய்து உருவாக்கப்பட்ட கனா காணும் காலங்கள் தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்கமுடியாது. 90களில் பிறந்தவர்களுக்கு இந்த தொடர் மிகவும் பிடித்தமான தொடராக இருந்து வந்தது . 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பான இந்த தொடர் அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
மோனிஷா

இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர் நடிகைகள் பின்னர் தொலைக்காட்சிகளிலும் வெள்ளித்திரையிலும் நடிகர் நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனா காணும் காலங்கள் ரீ – யூனியன் நடைபெற்றது. இதில் பெரும்பாலான கானா காணும் காலங்கள் பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் இந்த தொடரில் சங்கவியாக நடித்து வந்த மோனிஷா வரவில்லை.

இதையும் பாருங்க : சூர்யாக்கு இந்த பட்டப்பெயர் தான் எரிச்சலா இருந்துச்சாம் – கல்லூரியில் அவருக்கு வைக்கப்பட்டுள்ள விஜய் பட பட்டப்பெயர்.

- Advertisement -

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், ‘ரீ யூனியனில் கலந்துகொள்ள என்னையும் அழைத்தார்கள். எனக்கும் கலந்து கொள்ள மிகவும் ஆசையாகத்தான் இருந்தது ஆனால் வருடத்திற்கு இரண்டு முறை சென்னை வருவேன் கடந்த பிப்ரவரி மாதம் தான் கடைசியாக சென்னை வந்து திரும்பினேன் அதனால்தான் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

அதே போல தற்போது மருத்துவராக இருக்கும் மோனிஷ, கனா காணும் சீரியல் பற்றி பேசுகையில், ”ஒருகட்டத்துல எனக்கு மெடிக்கல் கிளாஸ் ஆரம்பிச்சிட்டதால என்னால தொடர்ந்து ஷூட் வர முடியலை. வேற வழி இல்லாமத்தான் செத்துப்போன மாதிரி காட்டிட்டாங்க நான் இறந்து போன எபிசோடு ஒளிபரப்பான அடுத்த சில தினங்கள்ல ரசிகர்கள் சிலர் எங்க வீட்டைக் கண்டுபிடிச்சு வந்துட்டாங்க. அவங்களைச் சந்திச்சு நாலு வார்த்தை பேசின பிறகே திரும்பிப் போனாங்க என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement