சூர்யாக்கு இந்த பட்டப்பெயர் தான் எரிச்சலா இருந்துச்சாம் – கல்லூரியில் அவருக்கு வைக்கப்பட்டுள்ள விஜய் பட பட்டப்பெயர்.

0
9438
surya
- Advertisement -

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். விஜய், சூர்யா துவங்கி அதர்வா கௌதம் கார்த்திக் வரை எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் நடிகர் சூர்யாவும் ஒருவர், இறுதியாக இவரது நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று ‘ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது இவர் கௌதம் மேனன் இயக்கி இருக்கும் அந்தாலஜி வெப் தொடரான ‘நவராசா’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

நவரசா வெப் தொடரில் இவர் நடித்த கிட்டார் கம்பி மேல நின்று பாடல்கள் அனைத்தும் வெளியாகி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு சூர்யா தன்னுடைய கல்லூரி அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.அப்போது, உங்களுக்கு எந்த பட்டப்பெயர் எரிச்சலாக இருந்தது என்று கேட்கப்பட்டது, எனக்கு நல்லா பாட வராது , அதனால் எனக்கு பிடித்த பாடல்களை விசில் அடித்து பாடுவேன். அதனால் என்னை பிகில், விசில் என்று கூறுவார்கள் அழைப்பார்கள் என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : யப்பா அஜித் ரசிகர்களே இது அஜித்தே இல்லையாம் – இது யார் தெரியுமா ? வெளியான புகைப்படம் இதோ.

- Advertisement -

அருண் விஜய், விஜய், சூர்யா அனைவருமே சென்னை லோயாலா கல்லுரியில் தான் படித்தவர்கள். மேலும், இதில் அருண் விஜய், சூர்யாவிற்கு கல்லூரியில் ஜூனியர். இப்படி ஒரு நிலையில் அருண் விஜய்யை சூர்யா ரேக்கிங் செய்து பல்ப் வாங்கியுள்ளார். நாங்கள் முதன் முதலில் சந்தித்தது கல்லூரியில் தான் நானும் ராகிங் செய்கிறேன் என்ற பெயரில் விஜயகுமார் சாரின் மகன் வருகிறார் என்று அவரை பராக்கு செய்யலாம் என்று நினைத்தேன்.

காலையிலிருந்து காத்திருந்தேன் என்னுடைய கண்ணில் அவர் படமே இல்லை பின்னர் மதியம் தான் என்னுடைய கண்ணில் பட்டார் அப்போது அவரிடம் என்னமோ 360 டிகிரி எல்லாம் அடிப்பியாமே பண்ணு என்று கேட்டேன், ஆனால், அவனும் இறுதி வரை என்னை மதிக்கவே இல்லை. கடைசியில் காலேஜ் முடிக்கும் வரை அவன் பண்ணவே இல்லை எனக்கு கேவலமா போச்சி என்று சூர்யா கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement