என் ஒரு நாள் சம்பளம் இவ்ளோ தான், பிச்சைக்காரன் கூட என்னை விட அதிகமா சம்பாதிப்பான் – கனா காணும் காலங்கள் புலி வேதனை.

0
790
ragahav
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இளசுகளின் பேவரைட் சீரியல் என்றால் கனா காணும் காலங்கள். இந்த தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்க முடியாது. அதோடு டிஆர்பியில் டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் இந்த சீரியலில் புலி கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராகவேந்திரன். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் இந்த தொடரில் இருந்து விலகுவதாகவும், மீடியா விட்டு விலகப் போவதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் 15 வருடமாக மீடியா துறையில் இருக்கிறேன். நான் ஆரம்பத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்தேன்.

- Advertisement -

நடிகர் ராகவேந்திரன் அளித்து உள்ள பேட்டி:

இப்போ வரைக்கும் அப்படித்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்க ரெடியாக இல்லை. அதற்காக என்னால் ஜால்ரா அடிக்க முடியாது. அதுவும் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இத்தனை வருஷம் எனக்காக என் அம்மா, அப்பா கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். இன்னமும் நான் அவர்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. மேலும், நான் 15 நாள் சூட்டிங் ஸ்பாட்டிற்கு போவேன். ஆனால், இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் தான் சீனிலேயே என்னை காண்பிக்கிறார்கள்.

சீரியலை என் நிலைமை இது தான்:

அதுவும் சில நேரங்களில் செட் பொருளாக இருந்திருக்கிறேன். என்னை சீரியலுக்காக கூப்பிடும் போது நீங்கதாங்க எல்லாம் என்று சொல்லுவார்கள். ஆனால், போகப்போக தான் நம்ம கேரக்டர் லட்சணம் என்று நமக்கு தெரியும். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு மாத சம்பளம் ரூ 6 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். யோசித்துப் பாருங்கள் அதை வைத்து எப்படி என்னுடைய குடும்பத்தை நடத்துவது. பின் ஒரு நாளைக்கு 3,500 ரூபாய் தான் என்னுடைய சம்பளம். பிச்சைக்காரன் கூட என்னை விட அதிகமாக சம்பாதிப்பான். அதோடு யூடியூபில் பல பேர் கெட்டவார்த்தை பேசி பிரபலமாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சப்போர்ட்டிங் ரோலில் நடிப்பவர்கள் நிலை:

அந்த அளவிற்கு காலம் சென்று கொண்டிருக்கின்றது. என்னை பொறுத்த வரையும் சப்போர்ட்டிங் ரோலில் நடிப்பவர்கள் ரொம்பவே பாவம். சம்பளம் கிடையாது, நல்ல கதாபாத்திரமும் கிடையாது, நிம்மதியும் கிடையாது, துணை நடிகராக நடிக்கிற பலருடைய குமுறல்கள் தான் நான் சொல்கிறேன். நான் காற்றுக்கென்ன வேலி தொடரில் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தேன். அந்த கதாபாத்திரம் டிராக் மாறுதுன்னு எனக்கு நல்லாவே தெரிந்தது. அந்த கேரக்டர் இருந்தாலும் இல்லனாலும் சீரியலை எந்த விதமும் பாதிக்காது என்று தெரிந்து கொண்டேன்.

மீடியா,சீரியலை விட்டு விலகும் ராகவேந்திரன்:

அதனால் எப்ப நாளும் என்னை தூக்கி விடுவார்கள் என்று எனக்கே தெரியும். அது தவிர பொருளாதாரரீதியாக ரொம்பவே கஷ்டமாக இருக்கு. இன்னமும் நடிக்கணும் என்கிற என்னோட கனவை மட்டும் நம்பியிருந்தால் எதுவுமே பண்ண முடியாது என்று தெரிந்து கொண்டேன். அதனால் தான் சீரியலில் இருந்து விலகி விட்டேன். இனி மீடியாவே வேண்டாம் என நான் எடுத்த முடிவு எடுத்திருக்கிறேன். இத்தனை வருஷத்தில் திரும்பிப் பார்க்கும் போது நான் எங்கே என் பயணத்தை ஆரம்பித்தேனோ அங்கேயே நிற்கிறேன் பெரிய வலியாக இருக்கிறது என்று மனவேதனையுடன் கூறி இருக்கிறார்.

Advertisement