என் அம்மா, அப்பா இல்லைன்னா பிச்சை தான் எடுத்திருப்பேன்- ‘கனா காணும் காலங்கள்’ ராகவேந்திரன் உருக்கம்

0
108
- Advertisement -

தன்னுடைய வாழ்க்கை பயணம் குறித்து கனா காணும் காலங்கள் ராகவேந்திரன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இளசுகளின் பேவரைட் சீரியல் என்றால் கனா காணும் காலங்கள் தான். இந்த தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்க முடியாது. அதோடு டிஆர்பியில் டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த சீரியலில் புலி கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராகவேந்திரன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்து இருந்தார்.

- Advertisement -

கனா காணும் காலங்கள் ராகவேந்திரன்:

அதற்கு பின் இவர் இந்த தொடரில் இருந்து விலகுவதாகவும், மீடியா விட்டு விலகப் போவதாகவும் சில ஆண்டுகளுக்கு முன் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். தற்போது இவர் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு போராடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்தொடர்பாக அளித்த பேட்டியில் ராகவேந்திரன், மீடியாவில் பெரிய பிரேக் எடுத்திருந்தேன். என்னுடைய கேரியினுடைய தொடக்கத்தில் பிளே பேக் சிங்கராக வேணும் என்று தான் வந்தேன்.

ராகவேந்திரன் பேட்டி:

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஆடிஷனுக்கு குடும்பத்தோடு சென்றிருந்தேன். அப்போதான் கனா காணும் காலங்கள் சீரியலுக்கான ஆடிசன் நடந்து கொண்டிருந்தது தெரிந்த.து எனக்கு ஆக்டிங் பற்றி பெரிதாக எதுவுமே தெரியாது. வீட்டில் ஆடிஷனுக்கு அப்ளை பண்ண சொன்னார்கள் என்று தான் பண்ணினேன். அதில் செலக்ட் ஆகித்தான் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த தொடரில் நாங்க எல்லோருமே சப்போர்ட்டிங் ஆக்டராக தான் இருந்தோம். அந்த தொடர் வெற்றி பெற அதில் நடித்திருந்த முன்னாடி நடிகர்கள்தான் காரணம். இப்போது நான் ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறேன்.

-விளம்பரம்-

தற்போதைய நிலை:

சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலுமே ஆடியன்ஸ்க்கு தேவையானதை கொடுக்கணும் என்று அதற்கான வேலையை செய்து கொண்டிருக்கிறேன். ஆடியன்சை முட்டாளாக நினைத்து ஒரு ஸ்கிரிப்ட் எழுதாதீங்க என்று நான் எல்லா கிரியேட்டர்ஸ்கிட்டேயுமே சொல்லி இருக்கிறேன். ரெஸ்பான்சிபலான ஃபிலிம் மேக்கராக இருக்கணும் என்று தான் ஆசைப்படுகிறேன். எனக்குன்னு சில நெறிமுறைகள் இருக்கிறது. அதை மீறி படம் எடுக்க மாட்டேன். இப்போது என்னுடைய அம்மா, அப்பா மட்டும் என்னுடன் இல்லை என்றால் நான் பிச்சைதான் எடுத்திருப்பேன். இதை சொல்லித்தான் ஆகணும். கலையை பொறுத்தவரைக்கும் வாய்ப்பு என்று ஒன்று கிடைத்தால் தான் வேலை. பெரிய லைம் லைட்டில் இருந்து கொண்டு கீழே விழுந்து மறுபடியும் எழுந்து கொள்வது ரொம்ப கஷ்டம்.

வாழ்க்கை பற்றி சொன்னது:

எல்லாத்தையும் பார்த்துவிட்டு ஒருத்தன் மறுபடி அவன் தொழிலை ஆரம்பத்தில் இருந்து தொடங்குகிறான் என்றால் அவன் லைப் ரொம்ப வலியாக இருக்கும். அதை தான் இப்ப நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் ரொம்ப ஜாலியாக கலகலப்பாக இருந்த பையன். பெரிய சரிவுக்கு பிறகு தான் அப்படியே அமைதியாகிவிட்டேன். நான் மீடியாவை விட்டுட்டு போறேன் என்று சொன்னது அந்த வயதில் எல்லோருக்கும் இருக்கிற கோபம், விரக்தி. அதை நான் மனசாராக சொல்லி இருக்க மாட்டேன். ஆனால், கேட்கிறவர்கள் மனசார எடுத்துப்பாங்க. இப்ப எந்த வேலையும் இல்லை. 33 வயதாகிறது. இன்னும் நான் கல்யாணம் பண்ணிக்கவே இல்லை. அதுக்கும் பொருளாதார சூழல் தான் காரணம். எனக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கணும்னு ஆசை என்று ரொம்ப எமோஷனலாக நிறைய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement