விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று கனா கண்டேனடி. இந்த சீரியலில் ரேவதி ரோலில் நடித்துக் கொண்டிருப்பவர் சஞ்சனா. இந்த சீரியலின் மூலம் தான் இவர் மக்களுக்கு மிகப் பிரபலமானார் என்று சொல்லலாம். ஆனால், இதற்கு முன்பு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பொண்ணு சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் hotstar-யில் பிரபலமான ஹார்ட் பீட் என்ற வெப் சீரிஸில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சஞ்சனா அளித்த பேட்டியில், கனா கண்டேனடி சீரியலில் நான் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். இப்போது நான் வெளியில் எங்கு போனாலும் என்னை பற்றி கேட்பதை போலவே சீரியலில் என்னுடைய நண்பர்களான சைத்ரா, கவிதா பற்றி கேட்கிறார்கள். சொல்லப்போனால் சீரியல் மட்டும் இல்லாமல் ஆஃப் ஸ்கிரீனிலும் நாங்கள் நல்ல நண்பர்கள் தான்.
கனா கண்டேனடி:
தினமும் காலேஜ் போகுற மாதிரி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும். நானும் கவிதாவும் ஸ்கூல் மேட்ஸ். நாங்க ஒன்னாதான் படித்தோம். அப்ப நாங்க நண்பர்கள் தான். கவிதா ஃபர்ஸ்ட் பென்ஞ் ஸ்டுடென்ட். நான் கடைசி பென்சில் தான் இருப்பேன். இந்த சீரியல் உடைய வாய்ப்பு எனக்கு பொன்னி சீரியல் மூலமாகத்தான் கிடைத்தது. அந்த சீரியலில் நான் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த கேரக்டர் ரீபிளேஸ்மென்ட் கேரக்டர் தான். இதற்கு முன்னாடி பிக் பாஸ் தர்ஷிகா அந்த கேரக்டரில் நடித்திருந்தார்கள். அவங்க இதற்கு முன்னாடி அந்த சீரியலுக்கு என்ன மாதிரியான விஷயங்கள் செய்திருக்காங்கன்னு பார்த்து நானும் பொண்ணி சீரியலுக்கு புது விஷயங்களை சேர்த்து நடிப்பேன்.

சஞ்சனா பேட்டி:
அந்த சீரியலுக்கு பிறகு இந்த சீரியலுக்கு ஆடிஷன் போனேன். எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏனா எப்போதும் ஒரு விஷயத்துக்கு நம்ப 100 சதவீதம் கொடுக்கணும். நம்ம போட்ட உழைப்புக்கு எல்லாம் கிடைக்கும்னு நினைப்பேன். அப்படித்தான் இந்த கேரக்டரும் கிடைத்தது. பொன்னி சீரியல் மூலமாக எனக்கு வைஷ்ணவி நல்ல தோழியாக இருந்தார்கள். இப்போதும் அவர்கள் கூட டச்ல தான் இருக்கேன். பிறகு பிக்பாஸ் சபரியும் நல்ல நண்பன் தான். அப்போ பார்த்த மாதிரி தான் இப்போதும் அவர் இருக்கிறார். மேலும் ஹார்ட் பீட் சீரிஸிலும் நான் நடித்தேன். அந்த வாய்ப்பு எனக்கு முன்னாடியே கிடைத்தது.
சீரியல் அனுபவம்:
அப்ப நான் பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மற்றொரு வாய்ப்பும் வந்தது. அதற்கு ஆடிஷன் பண்ணி நான் வந்து விட்டேன். ஹார்ட் பீட்ல என்னுடைய கேரக்டர் ரொம்பவே அழகானதாக இருக்கும். ஆனால், முதலில் கொஞ்சம் பயமாக இருந்தது. அந்த கேரக்டர் கண்டிப்பாக பேசப்படும் என்று சொன்னார்கள். அதே மாதிரி மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த கேரக்டர் எழுதப்பட்ட விதமும் ரொம்ப அழகாக இருக்கும். இப்போ ஹார்ட் பீட் 3 வரப்போகுது. அதில் நான் இருப்பேனா என்பது ஒரு சர்ப்ரைஸ். வெயிட் பண்ணி பாருங்க.






