இதற்குப் பிறகு சீரியலில் நான் நடிப்பேனானு தெரியாது ஆனா, விஜய் டிவியின் அந்த ஷோக்கு கூப்பிட்டா கண்டிப்பா போவேன் – ரீ என்ட்ரி குறித்து இர்பான்.

0
718
kana
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்று தான் ‘கனா காணும் காலங்கள்’. இந்த சீரியல் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. பல்வேறு சீரியல்கள் இன்று சின்னத்திரையில் வந்தாலும் கனா காணும் காலங்கள் சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இது 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட தொடர். அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பி டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்த தொடரில் நடித்த பல பேர் வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இர்பான். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே இர்ப்பானுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்து இருந்தது. ஆனால், இவர் நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றி கொடுக்கவில்லை. இதனால் இவர் சில ஆண்டுகளாக மீடியாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது இவர் விஜய் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் ‘கனா காணும் காலங்கள்’ வெப்சீரிஸ்ஸில் நடித்து வருகிறார். ஒன்பது ஆண்டுகள் கழித்து இர்பான் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் இர்பான் பேட்டி அளித்திருந்தார்.

- Advertisement -

இர்பான் அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருந்தது, நிறைய சீரியல் ஆஃபர் வந்தது. நான் வேண்டாம் என்றுதான் அந்த வாய்ப்புகளை தவிர்த்தேன். கனா காணும் காலங்கள் வெப்சீரிஸ்ஸில் நடிக்க கூப்பிட்ட போது என்னால் மறுக்க முடியவில்லை. ஏன்னா, இந்த தொடர் மூலமாக தான் என்னுடைய கேரியர் ஆரம்பித்தது. அதை எப்படி வேண்டாம் என்று சொல்வது என்கிற எண்ணத்தில் தான் ஓகே சொல்லிவிட்டேன். அதுமட்டுமில்லாமல் இது சீரியல் டைப் கிடையாது. வெப்சீரிஸ் என்பதால் எந்த மறுப்பும் சொல்லாமல் வாய்ப்பை ஒத்துக்கொண்டேன். சரவணன் மீனாட்சி தொடருக்கு பிறகு கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கழித்து நடிக்க வந்திருக்கிறேன். இந்த புரோமோ வந்ததும் பலரும் இன்ஸ்டாகிராமில் என்ற ப்ரோபைலை தேடி மெசேஜ் பண்ணி இருந்தார்கள்.

கனா காணும் காலங்கள் வாய்ப்பு:

இத்தனை நாள் கழித்து ஆடியன்ஸ் என்னை ஞாபகம் வைத்திருந்தது மிகவும் பெரிய விஷயம். நான் புரோமோவில் ஒரே ஒரு சீன்னில் தான் வந்து இருக்கேன். ஆனால், அதுக்குள்ளே இந்த அளவுக்கு அன்பை கொடுப்பார்கள் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. கனா காணும் காலங்கள் வினீத் என கூப்பிட்டு இருந்தவர்கள் இப்ப கனா காணும் காலங்கள் ஜெர்ரி என கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். சீரியலுக்கு பிறகு படங்கள் பண்ணி இருந்தேன். அப்புறம் மூன்று ஆண்டுகளாக எதுவும் பண்ணாமல் மீடியாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன். எல்லோரும் எப்ப நடிப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இப்போ தான் உண்மையாகவே எனக்காக எத்தனை பேர் வெயிட் பண்ணி இருக்காங்கன்னு புரிந்துகொள்ள முடிகிறது.

-விளம்பரம்-
Vijay Tv Irfan Shares About His Experience In Rajavukku Check

குக் வித் கோமாளி வாய்ப்பு தவற விட்டது:

எப்பவும் நான் என்னுடைய பேஸ்ட்டை கொடுப்பேன். சினிமா, சீரியல் இரண்டுக்குமே எங்க வீட்டில் எனக்கு சப்போர்ட் பண்ணார்கள். ஆனால், ஒரே நேரத்தில் சினிமா வாய்ப்புகள் கம்மியாக ஆரம்பித்தது. பின் பிசினஸில் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்து தான் நான் மீடியோவில் இருந்து விலகினேன். ஆனால், குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்துகொள்ள கேட்டிருந்தார்கள். அப்போ நான் பிசினஸ் மீட்டிங்கில் இருந்தேன். அதனால் அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன். இருந்தாலும் மீடியா கனவு எப்போதும் உள்ளுக்குள் இருந்து கொண்டே தான் இருக்கு. தற்போது கனா மூலமாக மீண்டும் ரீஎன்ட்ரி அமைந்தது. ரொம்பவே சந்தோஷம்.

சீரியல் வாய்ப்பு குறித்து இர்பான் கூறியது:

இந்த வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. நான் படித்த ஸ்கூலில் இப்ப வாத்தியார் ஆகிவிட்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. பிறகு செட் ஆகி விட்டது. அந்த டைம் சோசியல் மீடியா எதுவும் கிடையாது. இப்ப ஆடியன்ஸ் உடனுக்குடன் இன்ஸ்டாகிராமில் அவர்களுடைய கருத்தை நேரடியாக நம்மகிட்ட சொல்கிறார்கள். இந்த கதாபாத்திரம் மூலம் எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. இதற்குப் பிறகு சீரியலில் நான் நடிப்பேனா? என்று தெரியவில்லை. ஆனால், தொடர்ந்து ஓடிடியில் எது கிடைத்தாலும் பண்ணலாம் என்று ஐடியாவில் இருக்கிறேன். இது தவிர குக் வித் கோமாளி வாய்ப்பு மறுபடியும் கிடைத்தால் நிச்சயம் மிஸ் பண்ணாமல் கலந்துப்பேன் என்று கூறியிருந்தார்.

Advertisement