கல்யாணத்துக்கு கூப்டா, எல்லாரும் இப்படி தான் சொன்னாங்க – பிரேம் பேட்டி.

0
6417
Prem
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இளசுகளை டார்கெட் செய்து உருவாக்கப்பட்ட கனா காணும் காலங்கள் தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்கமுடியாது. 90களில் பிறந்தவர்களுக்கு இந்த தொடர் மிகவும் பிடித்தமான தொடராக இருந்து வந்தது கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. கனா காணும் காலங்கள் தொடரைப் போலவே கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற இரு தொடர்களும் மாபெரும் வெற்றி தொடராக அமைந்திருந்தது.

-விளம்பரம்-
`வெற்றி, சுஷ்மா

இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர் நடிகைகள் பின்னர் தொலைக்காட்சிகளிலும் வெள்ளித்திரையிலும் நடிகர் நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் காமெடி நடிகர் பாண்டி, பிக் பாஸ் கவின், செம்பருத்தி கார்த்தி என்று ஏராளமானவர்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த தொடரை நீங்கள் மிஸ் செய்யாமல் பார்த்து இருந்தால் கண்டிப்பாக வெற்றி என்ற கதாபாத்திரத்தை நீங்கள் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டீர்கள். கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் வெற்றி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பிரேமிர்க்கு அப்போது கவினைவிட மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்து வந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : நெருக்கமாக இருக்கும் புகைப்பட ஆதாரம் இருக்கு. தர்ஷனுக்கு இத்தனை ஆண்டு ஜெயில் உறுதி. சனம் ஷெட்டியின் வழக்கறிஞர்.

குறிப்பாக இவருக்கு பெண்கள் மத்தியில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வந்தார்கள். இந்த நிலையில் நடிகர் பிரேம், சுஷ்மா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரேம் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில், கனா காணும் காலங்கள், கல்லூரியின் கதை ஆகிய இரண்டு சீரியல்களில் நடித்த அனைவருமே எனது திருமணத்திற்கு வந்து இருந்தார்கள்.

-விளம்பரம்-
கனா காணும் காலங்கள் டீமுடன் வெற்றி

நான் சிலகாலம் அவர்களுடன் தொடர்பு இல்லாமல் இருந்தேன் பின்னர் எனது திருமணத்திற்கு அனைவரையும் அழைக்க வேண்டும் என்று போன் மூலமாக தொடர்பு கொண்டு விலாசத்தை கேட்டேன் அனைவரும் சொல்லி வைத்ததுபோல பத்திரிக்கையை வேஸ்ட் பண்ணாத நீ சொன்னதே போதும் நாங்க ஓடி வந்து விடுகிறோம் என்று கூறினார்கள் எத்தனை நாட்கள் பேசாமல் இருந்தாலும் விட்டுப் போன அதே இடத்திலிருந்து மீண்டும் நட்பு தொடர்ந்தது ஒரு அழகான விஷயம் தான் உண்மையில் அனைவரும் என்னை நெகிழ வைத்து விட்டார்கள் என்பதனை அனைவரும் அறிவோம்

Advertisement