கனா காணும் காலங்கள் ராகவி ஞாகபம் இருக்கா ? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க. வெளியான லேட்டஸ்ட் வீடியோ.

0
2336
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இளசுகளின் பேவரைட் சீரியல் என்றால் கனா காணும் காலங்கள். இந்த தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்க முடியாது. இது 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட தொடர். அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது.

-விளம்பரம்-

இந்த இரு தொடர்களும் வெற்றி தொடராக அமைந்தது. அதோடு இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் கனா காணும் காலங்கள் சீரியலில் ராகவி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹேமா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

- Advertisement -

நடிகை ஹேமா நடித்த படங்கள்:

அதனைத் தொடர்ந்து இவர் பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூமகள் ஊர்வலம், அன்பே அன்பே, உன் வசம், காதல் கொண்டேன், மதுர, ஜி, பாரிஜாதம், திமிரு, அடைக்கலம் போன்ற பல சூப்பர் ஹிட் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். பின் இவர் 1999 ஆம் ஆண்டு ராதிகா நடிப்பில் வெளிவந்த சித்தி என்ற சீரியலில் பேபி காவேரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் மனைவி, கனா காணும் காலங்கள், மகள், அன்பே வா, தென்றல், முந்தானை முடிச்சு போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை ஹேமா நடித்த சீரியல்கள்:

அதுவும் 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம். இந்த சீரியலில் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் டான்ஸரும் ஆவார். இவர் ஜோடி நம்பர் 1 சீசன் 3 போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். அதற்கு பின் இவர் எந்த ஒரு சீரியலிலும் படங்களிலும் நடிக்கவில்லை. இவர் மீடியாவில் இருந்து விலகி இருந்தாலும் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

-விளம்பரம்-

நடிகை ஹேமாவை விமர்சிக்கும் ரசிகர்கள்:

அடிக்கடி ஏதாவது ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் தற்போது இவர் வெளியீட்டு இருக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அது என்னவென்றால், சமீபத்தில் நடிகை ஹேமா அவர்கள் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரலானது. மேலும், இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அட நம்ம ரகவியா இது! ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாகி மாறிவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகைகள் உடல் எடை குறித்து விமர்சனம்:

பொதுவாகவே சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலுமே நடிகைகள் கொஞ்சம் வெயிட் போட்டால் போதும் அதை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை பதிவிடுவது வழக்கம். அதுவும் சமீப காலமாக இந்த மாதிரியான விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் அதிகமாக வைரலாகி வருகிறது. இதற்கு நடிகர்களும் பதிலளித்து அலுத்துப் போய் விட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில் தற்போது நடிகை ஹேமா குண்டாக இருப்பதை குறித்து பலரும் விமர்சித்து வருகின்றார்கள். இதற்கு ஹேமா தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement