நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனுஷ் தயாரிப்பில் வெளியான “காக்க முட்டை” படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார். தமிழில் வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் “வட சென்னை ” படத்தில் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பாடகரூம், நடிகருமான அருண் ராஜா காமராஜ் இயக்கி வரும் “கனா ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திபு நிணன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏற்கனவே. ‘கனா’ படத்தின் வாயாடி பெத்தபுள்ள என்ற பாடல் வெளியாகி இருந்தது. நடிகர் சிவகர்த்துக்கேயனின் மகள் ஆராதனா பாடியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. “ஊஞ்சலா ஊஞ்சலா ” என்று துவங்கும் அந்த பாடல் வீடியோவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த பாடல் வைரலாக பரவி வருகிறது.
இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நடுத்தர குடும்பப்பெண் தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார். கிரிக்கெட் வீரங்கனையாக இந்த படத்தில் நடிக்க விருந்ததால் இதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வாட்மோரிடம் பயிற்சி பெற்று வந்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா. படத்தின் கதாபாத்திரத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்துள்ள இந்த செயலை படகுழுவினர் வெகுவாக பாரட்டியிருந்தனர்.