முதல் நாள் வசூலில் விஸ்வாசம் படத்தை மிஞ்சிய காஞ்சனா.! முழு விவரம் இதோ.!

0
464
Kanchana-3-Vs-Viswasam

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை செய்து இருந்தது. முதல் நாளில் தமிழகத்தில் பேட்ட திரைப்படத்தைவிட விஸ்வாசம் திரைப்படம் அதிக வசூலை செய்திருந்தது. இந்த திரைப்படம் தற்போது 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 திரைப்படம் விசுவாசம் படத்தின் வசூலை ட்வீட் செய்துள்ளது என்றால் நம்ப முடியுமா.

Image result for kanchana 3

விஸ்வாசம் திரைப்படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் 26.5 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால், காஞ்சனா 3 திரைப்படம் தமிழகம் முழுவதும் முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், திருச்சியில் மட்டும் இந்த படம் நல்ல வசூலை பெற்று உள்ளதாம்.

இதையும் பாருங்க : நாச்சியார் படத்தில் கிராமத்து லுக்கில் இருந்த இவானாவா இது.! பாத்தா நம்பமாடீங்க.! 

- Advertisement -

திருச்சியில் காஞ்சனா 3 திரைப்படம் முதல் நாளில் 17.7 லட்சம் வசூல் செய்துள்ளதாம். ஆனால், விஸ்வாசம் திரைப்படம் முதல் நாளில் திருச்சியில் 17.5 லட்சம் வசூல் செய்திருந்தது. இதற்கு முக்கிய காரணமே காஞ்சனா திரைப்படம் திருச்சியில் அதிக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம் திரைப்படம் வெளியான போது அதற்கு போட்டியாக சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படமும் வெளியாகி இருந்தது. இதனால் திருச்சியில் விஸ்வாசம் திரைப்படத்திற்கு குறைவான திரையரங்குகளில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல காஞ்சனா 3 திரைப்படம் எந்த ஒரு போட்டியும் இல்லாமல் சோலோவாக களமிறங்கியுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.