காஞ்சனா 3 பாக்க போறீங்களா.! அப்போ இந்த விமர்சனத்த முழுசா படிச்சிட்டு போங்க.!

0
1689
Kanchana
- Advertisement -

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா வரிசை திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. முனி, காஞ்சனா 1,2 போன்ற படங்களைத் தொடர்ந்து தற்போது ராகவா லாரன்ஸ் மீண்டும் காஞ்சனா 3 ஆம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது காணலாம்.

-விளம்பரம்-

கதைக்களம் :

- Advertisement -

தனது தாத்தாவின் அறுபதாம் கல்யாணத்திற்காக குடும்பத்துடன் ராகவா லாரன்ஸ் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கிறார். அப்போது வழியில் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு சாப்பிடச் சொல்கின்றனர். அப்போது அங்கே இருக்கும் ஒரு மரத்திலிருந்து ஒரு ஆணியை ராகவா லாரன்ஸ் தெரியாமல் பிடிங்கி விடுகிறார். ஆனால், அந்த ஆணையை பிடுங்கி உடன் பயங்கரமான பேய் ஒன்று வெளியே வந்து விடுகின்றது.

அந்தப் பேய் ராகவா லாரன்ஸ் உடம்பிற்குள் புகுந்து விடுகிறது அதன் பின்னர் முந்தைய காஞ்சனா பாகத்தை போல அந்த பேய்க்கு என்று ஒரு பிளாஷ்பேக் மற்றும் அந்த பேய் லாரன்சை வைத்து எப்படி தனது எதிரிகளை பழி வாங்குகிறது என்பதே மீதிக்கதை. அதனை காமெடி மற்றும் செண்டிமெண்ட், ஆக்ஷன், த்ரில் என்று கொடுத்திருக்கிறார் லாரன்ஸ்.

-விளம்பரம்-

ப்ளஸ் :

இந்த படத்தின் முதல் பிளஸ் என்று சொன்னால் அது இந்த படத்தின் கிராபிக்ஸ் மற்றும் கேமராமேன் தான் விசுவாசம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வெற்றி தான் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பேய் படத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு காட்சிகளையும் படமாக்கி உள்ளார். படத்தின் அடுத்த படியாக பிரியதர்ஷினி கோவை சரளா மற்றும் ஸ்ரீமதி தான் சொல்ல வேண்டும் இருவரும் கடந்த காலத்தில் செய்த காமெடியை போலவே இதிலும் அசத்தியுள்ளனர்.

பிளாஷ்பேக்கில் வரும் லாரன்ஸின் கதாபாத்திரம் நம்மை கவர்கின்றது. இதேபோல லாரன்ஸின் நடனத்தை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை பேய் படத்திற்கு ஏற்றவாறு தமன்னா திரில்லான இசையை கொடுத்துள்ளார்.

மைனஸ் :

படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்றால் அது படத்தின் கதைக்களம் தான். கடந்த காஞ்சனா கதைகளைப் போன்று அதே பழிவாங்கும் பேய் கதைதான். மேலும், படத்தில் மூன்று கதாநாயகிகள் எதற்காக வந்தார்கள் என்பதே தெரியவில்லை. அவர்கள் வரும் காட்சிகள் மிக அழுத்தமாக இல்லை அதேபோல ஒரு சில காட்சிகளில் வரும் காமெடிகள் நம்மை சோதிக்கின்றன.

இறுதி அலசல் :

ஹாலிவுட் பேய் படங்களை பார்த்த திரைப்பட ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய பயமாக இருக்காது. இருப்பினும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இது ஒரு சிறப்பான கோடைகால படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் காஞ்சனா 3 பேண்ட் நனையாமல் ஒருமுறை இந்த படத்தை பார்க்கலாம்.

Advertisement