பயமா இருக்கா? இனி பயங்கரமா இருக்கும் – விஜய் டிவியை தொடர்ந்து பீஸ்ட் படத்தை காப்பியடித்த அடுத்த சீரியல்.

0
404
kandanaalmudhal
- Advertisement -

விஜய்யின் பீஸ்ட் படத்தை பிரபல சீரியல்களில் காப்பி அடித்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘பீஸ்ட்’.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் பேன் இந்திய படமாக வெளியாகி இருந்தது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருந்தார். படத்தில் ஒரு மால்-லை தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் விஜய் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் விஜய், மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? என்பது தான் படத்தின் மீதி கதை.

- Advertisement -

பீஸ்ட் படம்:

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்தை பிரபல சீரியல்களில் காப்பி அடித்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான புது கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு சேனலுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி கொண்டு வருகிறது.

நவீன் குறித்த தகவல்:

அந்த வகையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதில் ஒளிபரப்பாகும் கண்ட நாள் முதல் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியலில் குமரன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நவீன். இவர் சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகனாக நடித்து இருந்தார். அதோடு இவர் சின்னத்திரை வருவதற்கு முன்பே பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

கண்ட நாள் முதல் சீரியல்:

இருந்தும் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்து இருந்தது இதயத்தை திருடாதே சீரியல் தான். தற்போது நவீன் கலர்ஸ் தமிழில் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அருண் ராஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடர் விஜயின் படத்தை காப்பி அடித்திருக்கிறது என்ற சர்ச்சை எழுந்து இருக்கிறது. அதாவது, இந்த சீரியலில் கோயில் ஒன்றில் குழந்தைகள் மற்றும் பெண்களை தீவிரவாத கும்பல் பிடித்து வைத்து கொள்கிறார்கள்.

விஜய் படத்தை காப்பி அடித்த சீரியல்:

அப்போது அவர்களுள் ஒருவராக கான்ஸ்டபிள் குமரனும் இருக்கிறார். பின் அவர் அந்த கும்பலை அடித்து துவம்சம் செய்து இருக்கிறார். பீஸ்ட் பட கான்செப்டை அப்படியே சீரியலில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலிலும் தீவிரவாத கும்பல் மருத்துவமனையை ஹைஜாக் செய்கிறது. இப்படி சீரியல்களில் வித்தியாசமாக காட்சிகளை கொடுக்க பிரபல ஹீரோவின் பட காட்சியை பயன்படுத்துவது கொஞ்சம் கூட நியாயம் இல்லை என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் பாரதி கண்ணம்மா சீரியலிலும் பீஸ்ட் பட மால் சீனை காபி அடித்து அதே போல காட்சியை வைத்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement