பில்கிஸ் பானு கதை படமாக எடுக்க ஸ்கிரிப்ட் ரெடி. ஆனா அவங்க விடவாற்றங்க – கங்கனா ரணாவத் சொன்ன விஷயம்.

0
132
- Advertisement -

பில்கிஸ் பானு கதையை கங்கனா ரணாவத் எடுக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த விபத்தில் 59 கரசேவகர்கள் உயிரிழந்திருந்தார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு குஜராத் மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

அப்போது தஹோத் மாவட்டம் ரந்திக்புர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பில்கிஸ் பானு. இவருக்கு 21 வயது தான். அந்த சமயம் இவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். இவரை பயங்கர ஆயுதங்களுடன் வந்த கொடூர கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்திருந்தது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே புரட்டி போட்டு இருந்தது. இதை அடுத்து பில்கிஸ் பானு தனக்கு நேர்ந்த கொடுமைக்கு சட்டத்திடம் நியாயம் கேட்டுப் போராடி இருந்தார்.

- Advertisement -

பில்கிஸ் பானு வழக்கு:

இதன் விளைவாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அந்த கொடூர கும்பலை சேர்ந்த 11 பேருக்கு 2008 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து இருக்கிறது. மேலும், மேல்முறையீட்டு மனுவை குற்றவாளிகள் போட்டு இருந்தார்கள். ஆனால், அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடியும் செய்து இருந்தது. பின் அந்த குற்றவாளிகள் 15 ஆண்டுகளாக தண்டனையை அனுபவித்திருந்தார்கள். அதற்குப் பிறகு அந்த குற்றவாளிகளின் வேண்டுகோளை பரிசீலனை செய்ய குஜராத் அரசை நீதிமன்றம் அறிவித்து இருந்தது.

குற்றவாளிகள் விடுதலை:

இது குறித்து ஒரு குழுவையும் குஜராத் பாஜக அரசு அமைத்து இருந்தது. அந்த குழு வழங்கிய பரிந்துரை அடிப்படையில் தான் அந்த 11 குற்றவாளிகளையும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலை செய்தது. வெளியே வந்த அந்த 11 குற்றவாளிகளும் விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் மாலைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்தார்கள். இதற்கு இந்தியா முழுவதுமே கடுமையான எதிர்ப்புகளும், கண்டனங்களும் தெரிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

மேலும், குற்றவாளிகளை விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அரசிற்கு எதிராகவே நீதி கேட்டு பில்கிஸ் பானு மீண்டும் சட்டை போராட்டத்தை தொடர்ந்து இருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவில் தற்போது, குஜராத் அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டத்தின் ஆட்சியை மீறி இருக்கிறது. குற்றவாளிகள் 11 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

கங்கனா பதில்:

இந்த நிலையில் இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் கங்கனாவிடம், பெண்ணியம் குறித்து தொடர்ந்து பேசியும், படங்கள் எடுத்து வரும் நீங்கள் ஏன் பில்கிஸ் பானு கதையை திரைப்படமாக எடுக்கக் கூடாது? என்று கேட்டிருக்கிறார். இதற்கு கங்கனா, பில்கிஸ் பானு கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று மூன்று ஆண்டுகளாக நான் தீவிரமாக ஆராய்ச்சி செய்து ஸ்கிரிப்ட் எல்லாம் தயார் செய்து விட்டேன். ஆனால், அரசியல் ரீதியான பிரச்சனைகள் இதில் இருப்பதாக சொல்லி நெட்பிலிக்ஸ், அமேசான், பிற தயாரிப்பு நிறுவனங்கள் என் கதையை நிராகரித்து விட்டார்கள். அதேபோல் கங்கனா பிஜேபியை ஆதரிப்பதால் நாங்கள் அவருடன் வேலை செய்ய மாட்டோம் என்று ஜியோ சினிமாஸ் கூறிவிட்டது. இதை செய்ய எனக்கு வேறு வழி என்ன இருக்கிறது? என்று கூறியிருக்கிறார்.

Advertisement