-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சீரியல்ஸ்

தேர்தலில் வெற்றி பெறுவது யார்? தர்ஷினி- கரிகாலன் திருமணம் நடக்குமா? அதிரை புகார் என்ன ஆனது?

0
529

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில வாரங்களாகவே சீரியலில் தேர்தல் ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம், வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள்.

எதிர்நீச்சல் சீரியல்:

இதை அறிந்து குணசேகரன் கோபப்பட்டு அவர்களை அடக்கி ஆள நினைக்கிறார். பின் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த அப்பத்தா இறந்து விடுவதைப் போல காண்பிக்கிறார்கள். இன்னொரு பக்கம், ஜீவானந்தத்தை போலீஸ் கைது செய்து விடுகிறார்கள். பின் சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் குணசேகரன்- ஈஸ்வரி இருவரும் எதிர் எதிரே நிற்கிறார்கள். மேலும், கடந்த வாரம் எபிசோட்டில் கிருஷ்ணன் மெய்யப்பன் மற்றும் அவருடைய அண்ணன் ராமசாமி மையப்பனை காண்பிக்கிறார்கள்.

குணசேகரன்- ஈஸ்வரி தேர்தல்:

-விளம்பரம்-

இவர்கள் இருவரும் புது கம்பெனிக்காக ஜனனியிடம் சண்டை போடுகிறார்கள். இதனால் ஜனனி தன்னுடைய புது கம்பெனிக்கு பூஜை போட தன்னுடைய கணவருடன் வருகிறார். அங்கு மெய்யப்பன் குடும்பம் பூஜை போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் ஜனனிக்கும் மெய்யப்பன் குடும்பத்திற்கும் வாக்குவாதம் நடைபெறுகிறது. பின் நாச்சியப்பன், மெய்யப்பன் குடும்பத்தை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. இதனால் ஜனனியும் உடைந்து போய் விடுகிறார். சொத்துக்காக நாச்சியப்பன் தன்னுடைய குடும்பத்தை வேண்டாம் என்று மெய்யப்பன் குடும்பத்துடன் சேர்ந்து விடுகிறார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் ஆதிரை குணசேகரன் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இதனால் குணசேகரன் தலைமறைவாகி விடுகிறார். மேலும், தர்ஷினியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஜான்சி ராணியும், அவருடைய மகன் கரிகாலனும் திட்டம் போட்டு தரிசனையை டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் ஆத்திரம் தாங்க முடியாமல் வீட்டின் பெண்கள் ஜான்சி ராணியை வெளுத்து வாங்குகிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், வழக்கம்போல் ஜான்சி ராணி, குணசேகரனிடம் அழுது புலம்புகிறார்.

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் விசாலாட்சியின் தம்பி வீட்டிற்கு வந்து தேர்தலை குறித்து பேசுகிறார். அப்போது குணசேகரன் யார் வெற்றி பெறுவார்கள்? என்று கேட்டதற்கு நல்லவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும் என்று சொல்ல குணசேகரன் முகம் மாறுகிறது. பின் கரிகாலன், எனக்கும் தர்ஷினிக்கும் திருமணம் எப்போது என்று கேட்டவுடன் ஈஸ்வரி கத்துகிறார். இனி வரும் நாட்களில் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? தர்ஷினி- கரிகாலன் திருமணம் நடக்குமா? கதிர் நடிக்கிறாரா? ஆதிரை கொடுத்த புகார் என்னானது? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news