கன்னடமும் இல்ல இந்தியும் இல்ல, இது தான் பழமையான மொழி. இது ஏன் தேசிய மொழியா இருக்க கூடாது – கங்கனாவின் புதிய சர்ச்சை.

0
470
kangana
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியை தேசிய மொழியாக அறிவிக்கவேண்டும் என்று கூறியதிலிருந்து இந்த பேச்சு தென்னிந்திய மாநிலங்களில் பயங்கர கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் தங்களுடைய மொழியை பெருமைப்படுத்தி கூறி வருகின்றனர். குறிப்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையில் ‘விக்ரம் ராணா’ பட புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட கன்னட நடிகர் கிச்சா சுதீப் அவர்கள் கூறி இருந்தது,

-விளம்பரம்-

இந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்கள் பான் இந்தியா படங்களை எடுக்கிறார்கள். அதை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்து வெளியிட்டாலும் வெற்றி பெறுவதில்லை. இன்று நாங்கள் அனைத்து மொழிகளிலும் பெறும் படத்தை எடுத்து இருக்கிறோம் என்று கூறியிருந்தார். இப்படி சுதீப் கூறியிருந்த கருத்து சோஷியல் மீடியாவில் படு வைரலானது. இதனையடுத்து சுதீப்பின் கருத்துக்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் டீவ்ட் போட்டு இருந்தார்.

- Advertisement -

அஜய் தேவ்கான் டீவ்ட்:

அதில் அவர், உங்களை பொறுத்தவரை இந்தி தேசிய மொழி இல்லை. அப்போது ஏன் உங்கள் தாய்மொழி படத்தை இந்தியில் டப் செய்கிறீர்கள்? இந்தி எப்போதும் எங்களுக்கு தாய்மொழி மற்றும் இந்தி மொழி தான் தேசிய மொழி என்று கூறி இருந்தார். இப்படி அஜய் தேவ்கான் போட்டிருந்த பதிவு சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியது. பலரும் இது குறித்து கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து மீண்டும் கிச்சா சுதீப், அஜய்தேவ் கானுக்கு பதில் டீவ்ட் போட்டிருந்தார். அதில் அவர், நான் அந்த இடத்தில் வேறு ஒரு தோணியில் பேசியிருந்தேன்.

-விளம்பரம்-

கிச்சா சுதீப்பின் பதிலடி:

உங்களை புண்படுத்த வேண்டும் என்பதற்காக நான் அப்படி சொல்லவில்லை. நேரில் சந்திக்கும் போது எந்த நோக்கத்திற்காக அப்படி சொன்னேன் என்பதை விளக்குகிறேன். ஆனால், நீங்கள் இந்தியில் பதிவிட்டு இருந்த இந்த பதிவு எனக்கு புரிந்தது. நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக் கொண்டிருக்கிறோம். இதே போல ஒரு வேலை நான் எனது தாய் மொழியான கன்னடத்தில் என் பதிலை பதிவு செய்திருந்தால் உங்கள் நிலைமை என்னவாக இருக்கும்? நாங்களும் இந்தியாவில் தான் இருக்கிறோம் சார் என்று பதிலடி கொடுத்தார். இதை அடுத்து கன்னட நடிகர் கிச்சா சுதீப்புக்கு ஆதரவாக பலரும் அஜய்தேவ்கனை வறுத்தெடுத்து வந்தனர்.

அஜய் தேவ்கானுக்கு ஆதரவாக கங்கனா அளித்த பேட்டி:

இந்நிலையில் அஜய் தேவ்கானுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பேட்டி ஒன்று அளித்து இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடந்த தன்னுடைய ‘தாகத் ‘ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ரணாவத் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர், இந்தி எங்கள் தேசிய மொழி என்று அஜய்தேவ்கான் கூறியது சரிதான். ஆனால், ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த மொழி மற்றும் கலாச்சாரத்தை பற்றி பெருமைப்பட உரிமை உண்டு. இந்தியை தேசிய மொழியாக அங்கீகரிக்க மறுப்பது அரசியலமைப்பை எதிர்ப்பதற்கு சமம்.

சமஸ்கிருதம் தான் தேசிய மொழி:

கன்னடம், தமிழ், இந்தியை விட பழமையானது சமஸ்கிருதம் தான். ஏன் சமஸ்கிருதம் நமது தேசிய மொழியாக இருக்க கூடாது? ஒருவேளை அந்த மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்திருக்கலாம். ஹிந்தி, ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு போன்ற மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருக்கிறது. சமஸ்கிருதம் ஏன் இந்தியாவின் அலுவல் மொழியாக இல்லை? பள்ளிகளில் ஏன் அதை கட்டாயப்படுத்தவில்லை என ஆவேசமாக அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பிரபலங்கள், ரசிகர்களை தரப்பில் இருந்து என்ன பதில் ? வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement