இப்படி விளம்பரத்தில் நடிச்சிட்டு நடிகைகள் இத பத்தி பேசுறாங்க, வெக்ககேடு – கழுவி ஊற்றிய கங்கனா.

0
628

அமெரிக்காவில் கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையில் கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபரை வெள்ளை போலீஸர் கழுத்து நெருக்கி கொடூரமாக கொன்றார்கள். இந்த சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்காக ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த கொலையை குறித்து இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, திஷா பதானி, சோனம் கபூர் உள்ளிட்ட பலர் கண்டித்தனர். இவர்கள் அனைவரும் சிவப்பழகு கிரீம் விளம்பர படங்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடிகைகள் குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கிண்டல் செய்து கருத்து பதிவிட்டு உள்ளார். இது குறித்து அவர் கூறியது, இந்திய நடிகர்-நடிகைகள் பலர் சிவப்பழகு கிரீம்களை விளம்பரப்படுத்துகின்றனர். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், தற்போது வெட்கம் இல்லாமல் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக நடக்கும் இனவெறியை கண்டித்து குரல் கொடுக்கிறார்கள்.

- Advertisement -

சிவப்பழகு விளம்பரத்திற்காக அந்த நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். என்ன தைரியத்தில் நீங்கள் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக பேசுபவர்களை கண்டித்து கருத்து சொல்லுகிறீர்கள். அதோடு இதை பற்றி யாரும் ஏன் என்று கேள்வி கேட்பது இல்லை. உலகம் முழுவதும் இனவெறி தலை விரித்து ஆடுகிறது.

படங்களில் சாதாரண ஒரு கதாபாத்திரத்துக்கு கூட கறுப்பான தோற்றம் கொண்டவராக நடிக்க மறுத்து விடுகின்றனர். மேலும், நான் எந்த ஒரு முக அழகு விளம்பரத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்று கங்கனா ரணாவத் ஆவேசமாக கூறினார். தற்போது கங்கனா ரணாவத் அவர்கள் தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார்

-விளம்பரம்-
Advertisement