இயக்குனரை கேவலமாக ஏமாற்றிய தாம் தூம் நடிகை.! புட்டை உடைத்த பிரபல இயக்குனர்.!

0
793
kangana-Ranavat

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘தாம் தூம் ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் நடிகை கங்கனா ரணாவத். தமிழில் பெரிதாக பேசபடவில்லை என்றாலும் இந்தி திரையுலகில் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.

இந்தியில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். அதன் பின்னர் இவர் நடித்த பல்வேறு படங்கள் ஹிட் அடிக்க தற்போது கதாநாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘மணிகர்ணிகா’. க்ரிஷ் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது. வெளிவந்த இரண்டு வாரத்தில் 70 கோடி வசூல் செய்துள்ளது. க்ரிஷ் இயக்கிய இந்த படத்தின் இயக்குனர் என்ற பெயரை கங்கனா ரணாவத் சொந்தம் கொண்டாடியுள்ளார்.

இதனால் படத்தின் இயக்குனர் க்ரிஷ் கோபமடைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் இந்த படத்தை முழுமையாக எடுத்து முடித்துவிட்டேன். இருப்பினும் இந்த படத்தின் சில காட்சிகளை மீண்டும் எடுக்குமாறு கங்கனா கூறினார். ஆனால், அதனை நான் மறுத்துவிட்டதால் அவரே சில காட்சிகளை எடுத்தார்.

-விளம்பரம்-

படத்தின் சில காட்சிகளை படமாக்கிவிட்டு படத்தின் இயக்குனர் என்று அவரே பெயரை போட்டுக்கொண்டார். இது என்ன ஒரு கேவலமான துரோகம் அவரை நடிக்க வைத்தது ஒரு குற்றமா என்று புலம்பியுள்ளார் இயக்குனர் க்ரிஷ். ஆனால், கங்கனா ரணாவத்தோ, எதிர்பாராதவிதமாக மணிகர்ணிகா படத்தை நானும் இயக்க வேண்டி வந்தது.  படத்தின் முக்கிய முடிவுகளை நான்தான் எடுத்தேன் க்ரிஷுக்கு,  உரிய மரியாதை கொடுத்துள்ளோம். இந்த படத்திற்கு பிறகு அடுத்த படத்தையும் இயக்குவேன் என்று திமிராக கூறியுள்ளார்.

Advertisement