என்ன மாதிரி ஒரு நடிகை இந்த உலகத்துல காமிங்க, நான் அத விட்டுட்றேன் – தலைவி பட புகைப்படங்களை பகிர்ந்து கங்கனா சவால்.

0
1215
kangana
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே சினிமாவில் அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று முக்கியமான நபர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க சில இயக்குனர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது அந்த படத்திற்கான பணிகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-
https://twitter.com/KanganaTeam/status/1359028812198129664

முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற படம் உருவாகி வருகிறது. ஏ எல் விஜய் இயக்கி வரும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணவ்த் நடிக்கிறார். இவர், தமிழில் ஜெயம் ரவி நடித்ததாம் தூம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்திற்காக நடிகை கங்கனா தமிழ் மொழியை கூட கற்றுவந்தார்.

- Advertisement -

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கும் எம் ஆர் ராதாவிற்க்கும் மோதல் ஏற்பட்டபோது எம் ஜி ஆரை எம், ஆர் ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த சம்பவங்களை வைத்து இந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்களாம். இந்த நிலையில் இந்த படத்தின் சில புகைப்படங்கள் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் கங்கனா

மேலும், இது உருமாற்றத்திற்கான எச்சரிக்கை… இந்த உலகத்தில் இப்போதைக்கு என்னைத் தவிர வேறு யாரும் இந்த அளவிற்கு மாற்றத்தைக் காண்பித்ததில்லை. மெரில் ஸ்ட்ரிப் போல அடுக்கடுக்கான கதாபாத்திரத் திறமை என்னிடம் உள்ளது. அதே போல கேல் கடாட் போல் என்னாலும் ஆக்ஷனாகவும், கிளாமராகவும் நடிக்க முடியும். இந்தப் பிரபஞ்சத்தில் என்னைத் தவிர வேறு யாராவது இந்த அளவிற்கு கலைத் திறமை காட்ட முடியுமா என வெளிப்படையாக சவால் விடுக்கிறேன். அப்போது என்னுடைய ஆணவத்தை நான் கைவிடுகிறேன். அதுவரை அந்தப் பெருமையின் மதிப்பு எனக்குத்தான், என்று சவால் விட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement