கங்கனா முதல் பூனம் பாண்டே வரை, சர்ச்சை நடிகைகள் கலந்துகொள்ள இருந்த ரியாலிட்டி ஷோவுக்கு ஏற்பட்ட சிக்கல் – இதான் காரணமாம்.

0
379
kangana
- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் கங்கனா ரணாவத். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகமானார். ஆனால், தாம் தூம் படத்திற்கு பின்னர் கங்கனா தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதிலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் பல கதாபாத்திரங்களில் கங்கனா நடித்துள்ளார். மேலும், நடிகை கங்கனா பாலிவுட்டில் மிகவும் சர்ச்சையான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். ரித்திக் ரோஷன் உடனான காதல் விவகாரம் துவங்கி மறைந்த நடிகர் சுஷாந்த் வரை இவர் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் சுஷிநாத் சிங் மரணத்திற்கு பின்னர் இவர் அடிக்கடி பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல் குறித்து பல கருத்துக்களை கூறி வந்தார். இதனாலேயே இவருக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு மிகப்பெரிய கூட்டமே செயல்பட்டு வருகிறது என்றும் குற்றம் சாட்டி இருந்தார். இருந்தும் இவர் தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தார். தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவந்த ‘தலைவி’ படத்தில் கங்கனா ஜெயலலிதாவாக நடித்தார். இந்த படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி இருந்தார்.

- Advertisement -

தலைவி படம்:

மேலும், இந்த படத்தில் அரவிந்த் சுவாமி, சமுத்திரகனி, நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பள்ளிப்பருவம் முதல் தொடங்கி அரசியலில் நுழைந்தது பிறகு அவர் முதல்வராக பதவியேற்று நாட்டை ஆண்டது என அனைத்துமே இயக்குனர் அழகாக காண்பித்து இருந்தார் .இந்த படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது. இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடத்தும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப கோர்ட் இடைக்கால உத்தரவு போட்டு உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி:

நடிகை கங்கனா ரனாவத் முதல் முறையாக லாக் அப் ரியாலிட்டி ஷோ நடத்த ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த ரியாலிட்டி ஷோ ஓடிடி தளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்புவது என்று அறிவித்திருந்தார்கள். இதற்கான விளம்பரங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. மேலும், இந்த நிகழ்ச்சியை தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரித்து வருவதாக இருந்தது. ஆனால், திடீரென கங்கனாவின் ரியாலிட்டி ஷோ திட்டமிட்டபடி இன்று தொடங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

லாக் அப் நிகழ்ச்சி மீது வழக்கு:

ஏக்தா கபூர் சனிக்கிழமை வெளியிட்ட லாக் அப் ரியாலிட்டி ஷோ விளம்பர அறிவிப்பில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்று தெரிவித்து இருந்தார். ஆனால், எப்போது நிகழ்ச்சி தொடங்கும் என்ற விவரத்தை மற்றும் நீக்கி விட்டார். அதாவது திட்டமிட்டபடி தொடங்க வேண்டிய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது சட்ட சிக்கலில் இந்த நிகழ்ச்சியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அது என்னவென்றால், ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சனோபர் பாக் என்பவர் லாக் அப் நிகழ்ச்சி தொடர்பாக ஹைதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில் அவர், எனது ஐடியாவை திருடி லாக் அப் நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 2018ம் ஆண்டே இந்த நிகழ்ச்சி தொடர்பாக சிறை என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், எனது ஐடியா தொடர்பாக எண்டோமல் சைன் இந்தியாவின் அபிஷேக் என்பவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் சனோபர் கோர்ட்டில் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு கோர்ட் போட்ட தடை:

மேலும், இந்த வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்து இருக்கிறது. அதில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை கோர்ட் ஆய்வு செய்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் லாக்அப் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஏக்தா கபூர், பாலாஜி டெலிபிலிம், எண்டோமால் சைன் இந்தியா போன்றவற்றின் மீது போலீஸ் நிலையத்தில் சனோபர் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்துள்ளார். இதனால் திட்டமிட்டபடி இன்று லாக் அப் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மேலும், இந்த வழக்கு தொடர்ந்தவருடன் பேச்சுவார்த்தை நடந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்ட பிறகு தான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றே சொல்லலாம்.

Advertisement