பெற்றோர் எதிர்ப்பையும் மீறி மாளிகை கட்டிய கங்கனா. எத்தனை கோடி தெரியுமா ?

0
3299
kangana-Ranavat
- Advertisement -

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் 2008-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளி வந்த தாம் தூம் படம் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். தற்போது ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு படம் ஆன தலைவி படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் மணிகர்ணிகா பிலிம்ஸ் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

-விளம்பரம்-

இந்த நிறுவனத்துக்காக மும்பையின் பெரும்புள்ளிகள் இருக்கும் பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியில் ஒரு மாளிகையை வாங்கி கட்டி உள்ளார். இதற்காக இவர் 48 கோடி ரூபாய்யை செலவழித்திருக்கிறார். இது மூன்று மாடி கொண்ட மாளிகை. மேலும், இந்த நிறுவனம் குறித்து கங்கனா ரனாவத் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து உள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியது, நான் சொந்தமாக ஒரு ஸ்டுடியோவைக் கட்ட நினைத்தேன். ஆனால், நடுவில் ரங்கூன், சிம்ரன் உள்ளிட்ட சில படங்கள் ஓடவில்லை. அதனால் சற்று தள்ளிப் போனது. மணிகர்ணிகாவுக்குப் பிறகும் மீண்டும் நிலை மாறியது. எனக்குப் பிடித்த மாதரி என் மாளிகையைக் கட்டி உள்ளேன். எனது ஆடிட்டர் ஏன் இதில் பணத்தைப் போடுகிறீர்கள்? பொதுவாகவே நீங்கள் எந்த தயாரிப்பு நிறுவனத்துக்காக பணியாற்றுகிறீர்களோ அவர்களே உங்களுக்கான இடத்தை வாடகைக்கு எடுத்துத் தருவார்கள்.

இந்த பணத்தை நீங்கள் வீடு அல்லது உணவகத்தின் மீது செலவு செய்யுங்கள். குறைந்தது 40-50 லட்சம் வருடத்துக்கு வாடகையே கிடைக்கும் என்றார். என் பெற்றோர் முதல் அனைவருமே நான் பணத்தை வீணடிக்கிறேன் என்று நினைத்தார்கள். ஆனால், இப்போதும் இது எனக்கு ஒரு சவால் தான். இது நல்ல முதலீடா இல்லையா என்பதை நானே போகப் போகப் தெரிந்துகொள்வேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்

-விளம்பரம்-
Advertisement