காதலர் தினத்தில் புது அவதாரம் எடுக்கும் கங்கனா ரனாவத் – வைரலாகும் வீடியோ, குவியும் வாழ்த்துக்கள்

0
138
- Advertisement -

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் புதிதாக ஹோட்டல் ஆரம்பித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். இவர் முதலில் மாடல் அழகியாக இருந்து தான் திரைப்பட நடிகை ஆனார். 2006 ஆண்டு வெளிவந்த ஹிந்தி திரைப்படம் மூலம் தான் இவர் சினிமா உலகில் தோன்றி இருந்தார். பின் தமிழில் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த ”தாம் தூம்” படத்தின் முலம் அறிமுகமாகி இருந்தார் நடிகை கங்கனா ரனாவத்.

-விளம்பரம்-

பின் இவருக்கு தமிழில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தார். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் கங்கனா. இவரை பாலிவுட் நயன்தாரா என்று அழைக்கிறார்கள். அதோடு இவர் இந்தியில் கதாநாயாகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவந்த ‘தலைவி’ படத்தில் கங்கனா நடித்தார்.

- Advertisement -

கங்கனா திரைப்பயணம்:

இந்த படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கங்கனா நடித்திருந்த படம் எமர்ஜென்சி. இந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நாடு முழுவதும் அமல்படுத்தியிருந்த அவசர நிலை பிரகடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.

எமர்ஜென்சி படம்:

இதில் இந்திரா காந்தியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதற்கிடையில் இவர் பாஜக கட்சியில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வாகி இருக்கிறார். இவர் அரசியலில் ஈடுபட்டாலும் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் தமிழில் மாதவன் நடிப்பில் உருவாகும் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

கங்கனா தொழில்:

இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்குகிறார். இந்த படத்தினுடைய அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த மாதம் 18ம் தேதி தொடங்க இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகை கங்கனா அவர்கள் ஹோட்டல் தொழில் தொடங்கியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கங்கனா இமயமலையில் ‘தி மவுன்டெய்ன் ஸ்டோரி’ என்ற பெயரில் ஒரு ஹோட்டலை தொடங்கி இருக்கிறார். வருகிற 14-ஆம் தேதி தான் இந்த ஹோட்டல் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

கங்கனா பதிவு:

இந்த ஓட்டலில் உண்மையான இமாச்சல பிரதேச உணவு வகைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த ஹோட்டல் மணாலியில் தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக கங்கனா பதிவிட்ட வீடியோவில், இது உங்களுடனான எனது உறவின் கதை, அம்மாவின் சமையலறை ஏக்கத்துக்கு இந்த உணவகம் ஒரு காணிக்கை, என்னுடைய சிறுவயது கனவு இப்போது நனவாகி இருக்கிறது என்றெல்லாம் கூறியிருக்கிறார். தற்போது கங்கனாவின் புது முயற்சிக்கு பலருமே பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement