இத்தனை ஆண்டுகள் போதைக்கு அடிமையாக இருந்தேன் – தலைவி பட நடிகை கங்கனாவின் வைரல் வீடியோ

0
973
kangana
- Advertisement -

பாலிவுட் சினிமாவில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். இவர் முதலில் மாடல் அழகியாக இருந்து திரைப்பட நடிகை ஆனார். 2006 ஆண்டு இந்தியில் வெளிவந்த திரைப்படம் மூலம் தான் சினிமா உலகில் தோன்றினார். தமிழில் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த ”தாம் தூம்” படத்தின் முலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். பின் இவருக்கு தமிழில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

-விளம்பரம்-

தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் கங்கனா. அதோடு இவரை பாலிவுட் நயன்தாரா என்று அழைக்கிறார்கள். இவர் இந்தியில் கதாநாயாகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் மணிகர்ணிகா ஃபிலிம்ஸ் என்ற ஸ்டுடியோவின் திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார்.

- Advertisement -

அதில் கங்கனா ரனாவத் சகோதரி ரகோலி சந்தல், அவர் மகன் பிரித்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் தரப்பில் அவருடைய டீம் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள். அதில் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் பாலிவுட்டில் தன்னுடைய ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களை குறித்து கூறி இருக்கிறார்.

அதில் அவர் கூறியது, நான் 15, 16 வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன். பல கனவுகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்தேன். நட்சத்திரங்களை என் கைகளால் பிடித்து விட முடியும் என்று உணர்ந்தேன். பிறகு சினிமாவுக்குள் நுழைந்து ஒன்றரை இரண்டு வருடம் போதைக்கு அடிமையாக இருந்தேன். என் வாழ்க்கை மிகவும் குழப்பங்கள் நிறைந்ததாக இருந்தது.

-விளம்பரம்-

எனக்கு நெருக்கமான மக்களுடன் மட்டுமே நான் பழகியிருந்தேன். மரணம் மட்டுமே அவர்களிடமிருந்து என்னை காப்பாற்றி இருக்க முடியும். இது எல்லாம் நான் டீன் ஏஜில் இருந்த போது நடந்தது. அப்போது என் வாழ்வில் ஒரு நல்ல நண்பர் வந்தார். அவர் எனக்கு யோகாவை அறிமுகப்படுத்தினார். ராஜயோக பற்றிய புத்தகத்தை கொடுத்தார். பிறகு நான் சுவாமி விவேகானந்தரை என்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டு என்னை நானே வளர்த்துக் கொண்டேன்.

அந்த சவாலான நேரங்கள் என் வாழ்க்கையில் வந்திருக்காவிட்டால் நான் தொலைந்து போயிருப்பேன். ஆன்மீக வழிகாட்டுதல் இல்லாமல் மன தைரியத்தை தன்னால் வளர்த்து கொண்டிருக்க முடியாது. என் புத்தியையோ, திறமையோ, உடல் ஆரோக்கியத்தையோ என்னால் வளர்த்து இருக்க முடியாது. அதனால் நான் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கெட்ட நேரம் மட்டுமே நல்ல நேரமாக முடியும் என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும், இவர் ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் லட்சுமி பாய் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏ எல் விஜய் அவர்கள் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடிகை கங்கனா ரனாவத் கமிட் ஆகி உள்ளார்.

Advertisement