‘அத்துமீறி நுழைந்தால்’ – அச்சுறுத்தும் வகையில் வீட்டின் வாசலில் எச்சரிக்கை பலகை வைத்துள்ள கங்கனா ரணாவத்.

0
233
kangana
- Advertisement -

வீட்டிற்கு வெளியே மிரட்டும் வகையில் கங்கனா ரனாவத் வைத்திருக்கும் அறிவிப்பு பலகை தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை எழுப்பி வருகிறது. பாலிவுட் சினிமாவில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். இவர் முதலில் மாடல் அழகியாக இருந்து தான் திரைப்பட நடிகை ஆனார். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி திரைப்படம் மூலம் தான் இவர் சினிமா உலகில் தோன்றி இருந்தார்.

-விளம்பரம்-

பின் தமிழில் இவர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த ”தாம் தூம்” படத்தின் முலம் அறிமுகமாகி இருந்தார். ஆனால், இந்த படத்தின் பின் இவருக்கு தமிழில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தார். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் கங்கனா. பலரும் இவரை பாலிவுட் நயன்தாரா என்று அழைக்கிறார்கள். அதோடு இவர் இந்தியில் கதாநாயாகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

- Advertisement -

கங்கனா திரைப்பயணம்:

மேலும், தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவந்த ‘தலைவி’ படத்தில் கங்கனா நடித்தார். இந்த படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி இருந்தார். இந்த படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது. இதை அடுத்து சமீபத்தில் வந்த ஹிந்தி ரியாலிட்டி நிகழ்ச்சியை நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி இருக்கிறார். தற்போது இவர் சந்திரமுகி 2 மற்றும் எமர்ஜென்சி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

கங்கனா வீடு புதுப்பித்தல்:

இப்படி இவர் தன்னுடைய கேரியரில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுகிறார். அந்த வகையில் இவர் வீட்டிற்கு வெளியே வைத்து இருக்கும் அறிவிப்பு பலகை தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கங்கனா மும்பையில் இருக்கும் தன்னுடைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ஏற்கனவே உத்தவ் தாக்கரே ஆட்சியில் இருந்தபோது கங்கனா வீட்டில் சட்ட விரோதமாக கட்டுமான பணி இருந்ததாக கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

இதனால் இந்த பிரச்சனையை கங்கனா நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். தற்போது மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி வந்திருப்பதால் மீண்டும் தன்னுடைய வீட்டை கங்கனா புதுப்பித்து கட்ட தொடங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வீட்டிற்கு வெளியில் நாய்கள் ஜாக்கிரதை, அனுமதி இன்றி வராதீர்கள் என்று அறிவிப்பு பலகையும் வைத்திருக்கிறார். ஆனால், கங்கனா வீட்டிற்கு வெளியில் வைத்திருக்கும் மற்றொரு அறிவிப்பு பலகை பார்த்து பலருமே அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். அதோடு கங்கனா வீட்டிற்கு அருகில் செல்லவும் பயப்படுகின்றனர்.

காரணம், அவர் வைத்திருக்கும் அறிவிப்பு பலகையில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள். துப்பாக்கி சூட்டில் தப்பித்தால் மீண்டும் சுடப்படுவீர்கள் என்ற எச்சரிக்கை பலகையை வைத்திருக்கிறார். இந்த அறிவிப்பு பலகை குறித்த சர்ச்சை தான் பாலிவுட்டில் வைரலாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து, மிரட்டும் வகையில் அறிவிப்பு பலகை எப்படி வைக்கலாம்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement