அன்புக்குரியவருடன் உடலுறவுகொள்ள விலை நிர்ணயிக்காதீர்கள் – கமல் கருத்திற்கு கங்கனா பதிலடி.

0
2343
kangana
- Advertisement -

தமிழகத்தில் வருகின்ற 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், ரஜினியின் புதிய கட்சி என தேர்தல் களம் காணவுள்ளனர். சமீபத்தில் தேர்தலுக்கான கட்சி சின்னங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நடிகர் கமலின் மக்கள் நீதி மையத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டவில்லை. ஆனால், புதுச்சேரியில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான நடிகர் கமலஹாசன் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த 3 தினங்களாக தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் கமல், வீட்டில் இல்லத்தரசிகள் செய்யும் பணிக்கும் சம்பளம் வழங்கி, வீட்டில் இருந்தபடியே, அவர்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பெருக்க வழிவகை கொண்டு வர உள்ளோம்.உலகத் தரத்தில் கட்டமைப்பு, மாணவர்களுக்கு தரமான கல்வி, விவசாயிகளுக்கு நேரடி சந்தை, மீனவர்களுக்கு உயிர் காக்கும் தொழில்நுட்பம், ஒவ்வொரு தமிழனுக்கும் சொந்த வீடு என, எல்லாரையும் வளமாக்கும் திட்டம் இது என்றும் கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : லீக்கான Ticket To Finale 3ஆம் சுற்று முடிவு – முன்னிலையில் யார் இருக்கா பாருங்க.

- Advertisement -

கமலின் இந்த கருத்திற்கு பலரும் பாராட்டி இருந்தனர். இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் வழங்கும் திட்டம் பற்றி தெரிவித்ததற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டு தெரிவித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் சசி தரூர் பதிவிட்டு இருந்த ட்வீட்டை முன்வைத்து நடிகை கங்கனா ரனாவத் பெண்களுக்கு ஊதியம் அளிப்பது குறித்து கமல் சொன்ன கருத்தினை கடுமையாக விமர்சித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், எங்கள் அன்புக்குரியவருடன் இணைவதற்கு விலை நிர்ணயிக்காதீர்கள். எங்களுக்குச் சொந்தமானவரை தாயைப் போல கவனித்துக்கொள்வதற்குச் சம்பளம் தர வேண்டாம். எங்கள் மாளிகையான வீட்டில் அரசிகளாக இருப்பதற்கு ஊதியம் தேவையில்லை. எல்லாவற்றையும் வியாபாரமாகப் பார்க்காதீர்கள். பெண்ணிடம் உங்களை ஒப்படைத்து விடுங்கள். உங்களிடம் அன்பையும் மரியாதையையும் தான் எதிர்பார்க்கிறோம், ஊதியத்தை அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement