மூன்றாம் குழந்தையை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனை தர வேண்டும் – கங்கனா ரணாவத் (ஆனால், கங்கனா கூட பொறந்தவங்க எத்தன பேரு தெரியுமா)

0
747
kangana
- Advertisement -

மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்க வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். தாம் தூம் படத்திற்கு பின்னர் தமிழில் இவர் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதிலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகை கங்கனா.

-விளம்பரம்-
A screenshot of Kangana Ranaut's tweet.

அது போக இவர் பாலிவுட்டில் மிகவும் சர்ச்சையான ஒரு நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். ரித்திக் ரோஷன் உடனான காதல் விவகாரம் துவங்கி சமீபத்தில் உயிர் இழந்த சுஷாந்த் வரை இவர் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதிலும் சுஷிநாத் சிங் மரணத்திற்கு பின்னர் இவர் அடிக்கடி பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல் குறித்து பல கருத்துக்களை கூறி வந்தார். இதனாலேயே இவருக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு மிகப்பெரிய கூட்டமே செயல்பட்டு வருகிறது என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.

இதையும் பாருங்க : நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமணம் – கவின், விஜய் சேதுபதி என்று பலர் நேரில் சென்று வாழ்த்து.

- Advertisement -

சமீபத்தில் நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல இவரது அலுவலகம் இடிக்கப்பட்டது கூட பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில்

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், “என்னுடைய தாத்தாவுடன் பிறந்தவர்கள் 8 பேர். அப்போது நிறைய குழந்தையை பெற்றுக் கொள்வார்கள். அதில் பலரும் இறந்தும் போவார்கள். அப்போது காட்டில் வசித்ததால் ஆபத்தும் அதிகம். ஆனால் நாம் அப்போது இருப்பதுபோலவே இப்போதும் இருக்க முடியுமா என்ன? காலத்திற்கு ஏற்றார்போல நாம் மாற வேண்டும். இப்போது நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும். அதற்கு சீனாவில் இருப்பது போல கடுமையான சட்டங்கள் தேவை” என கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

கங்கனாவின் இந்த பதிவு நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதில், சலோனி கவுர் என்ற நகைச்சுவை நடிகை, கங்கனா ரனாவத்துக்கு உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரர், ஒரு சகோதரி என மூன்று பேர் என நக்கலாக பதிவிட்டு இருந்தார். அதே போல

Advertisement