விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 84 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார், கெமி, ப்ரஜன், ரம்யா, வியானா, எப் ஜே, ஆதிரை, அமித், கனி வெளியேறினார்கள்.
பிக் பாஸ் 9:
மேலும், இந்த நிகழ்ச்சியில் பரீட்சயமான நபர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தான் கனிதிரு. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு இவருடைய தந்தை பிரபல இயக்குனர். இவருடைய சகோதரி விஜயலட்சுமி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஆவார். இருந்தாலும் தன்னுடைய திறமையின் மூலம் சோசியல் மீடியாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் கனி திரு.

கனி வெளியேற்றம்:
இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பங்கேற்றிருந்தார். அதற்கு பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்திலிருந்து இவர் தன் வேலையை சிறப்பாக தான் செய்து வந்தார். பின் கடந்த வாரம் இவருடைய வெளியேற்றம் பலருக்குமே அதிர்ச்சியாக தான் இருக்கிறது. கனி வெளியேறியது ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கூறி கொண்டு வருகிறார்கள்.
View this post on Instagram
கனி வீடியோ:
இப்படி இருக்கும் நிலையில் எவிக்ஷனுக்கு பிறகு கனி வெளியிட்டிருக்கும் எமோஷனல் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், இத்தனை நாட்கள் எனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு ரொம்பவே நன்றி. என்னை ஏன் மக்களுக்கு பிடிக்காமல் போனது என்று எனக்கு தெரியவில்லை. நான் எவிக்சன் ஆவேன் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை. இது மக்கள் என்பதால் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன். நான் ரொம்பவே உடைந்து விட்டேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் தேடிப் பார்க்கிறேன். இந்த அன்பை எனக்கு எப்போதும் கொடுங்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார்.






