தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் கஞ்சா கறுப்பு. இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடித்து மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்த ‘பிதாமகன்’ படத்தில் கஞ்சா விற்பவராக கறுப்பு நடித்திருந்தார். இதனால் அவரை அனைவரும் கஞ்சா கருப்பு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சென்னை கருப்புக்கும் அவரது வீட்டு உரிமையாளருக்கும் இடையில் சமீப காலமாக பிரச்சனை உண்டாகி அதன் காரணமாக சமீபத்தில் அவர் காவல் நிலையத்தில் தனது வீட்டு உரிமையாளர் மீது புகார் கொடுத்திருக்கிறார்.
இந்த விஷயம் குறித்து கஞ்சா கருப்பு கூறுகையில், நான் இந்த வீட்டுக்கு குடி வந்து நாலு வருஷம் ஆயிடுச்சு. இந்த வீட்டுக்கு நாலு 20,000 ரூபாய். போன மாசம் வரைக்கும் கரெக்டாக நான் வாடகை கொடுத்து வருகிறேன். இதுவரை வாடகை தாங்கன்னு அவரும் கேட்டதில்லை. அதற்கு முன்னாடியே நான் கொடுத்து விடுவேன்.
அதே மாதிரி வீட்ல ஏதாவது வேலையினாலும் சொன்னவுடனே என் வீட்டு உரிமையாளர் செஞ்சு கொடுத்திடுவார். சில சமயங்களில் நானே பண்ணிடுவேன். எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்லாதான் போயிட்டு இருந்தது. ஆனா, என்ன ஆச்சுன்னு தெரியல அவர் திடீர்னு மாறிட்டாரு. திடீர்னு வந்து எனக்கு வீடு வேணும் வந்து கேக்குறாரு. நீங்க காலி பண்ணிட்டீங்க என்று சொல்கிறார். சரி கொஞ்சம் டைம் கொடுங்கனு அவர்கிட்ட சொன்னேன்.
கஞ்சா கருப்பு புகார்:
அப்புறம் என்ன விசாரிச்சு பார்த்தா அவர் லீசுக்கு வீட்டை விட போறார்னு தெரிஞ்சுக்கிட்டேன். அந்த லீஸ்பணத்தை நான் கொடுக்கிறேன் என்று சொன்னால் கூட அவர் கேக்கல. என்னை வீட்டை விட்டு காலிப் பண்ண வைக்கிறதிலேயே அவர் குறியாக இருக்கிறார். பின் நானும் வீட்டைத் தேட ஆரம்பிச்சிட்டேன். ஆனால், உடனே வீடு கிடைக்க மாட்டேங்குது. கிடைத்தால் காலி செஞ்சிடுவேன். இப்பவும் கிடைக்காமல் தேடிகிட்டு தான் இருக்கேன். சூழ்நிலை எப்படி இருக்கு, வீட்ல ஆள் இல்லாத போது, அதாவது நான் மதுரையில் இருந்தப்ப என் வீட்டு பூட்டை உடைத்து வீட்டுக்குள் போய் பொருட்களை எல்லாம் ஒதுக்கி ஓரமாக வைத்துவிட்டு வெள்ளையடிச்சி இருக்காங்க.
புகாரில் சொன்ன விஷயம்:
அவர் எதற்கு இப்படி செய்தார் என்று விசாரிச்சால், சினிமாக்காரங்க ஏமாத்தி வீட்டை ஆட்டைய போட்டுடுவாங்கன்னு பயப்படுகிறார் என்று கேள்விப்பட்டேன். என் மூஞ்சை பார்த்தா ஏமாத்துறவன் மாதிரியா தெரியுது. என் கலைமாமணி விருது டாலரை எல்லாம் காணோம் என்று கஞ்சா கருப்பு கூறி இருந்தார். இந்த பஞ்சாயத்து முடிவதற்குள் அரசு மருத்துவர்கள் மீது கஞ்சா கருப்பு குற்றம் சாட்டிற்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கஞ்சா கருப்பு அவர்கள் தனக்கு காலில் வலி ஏற்பட்டதன் காரணமாக சென்னை போரூரில் இருக்கும் நகர்ப்புற சமுதாய அரசு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.
கஞ்சா கருப்பு வீடியோ:
அப்போது மருத்துவமனையில் எந்த மருத்துவர்களும் இல்லை என்று ஆவேசத்தில் கஞ்சா கருப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு மூதாட்டி சிகிச்சை எடுக்க வந்திருக்கிறார். மாணவர் ஒருவர் தலையில் காயத்தோடு இருக்கிறார். ஆனால், இங்கு ஒரு மருத்துவர்கள் கூட இல்லை. இங்கு யார் சிகிச்சை அளிப்பது? அரசு தரப்பில் இதை மருத்துவத்துறை அமைச்சர் கேட்க வேண்டாமா? இல்லையா? அரசிடம் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு எங்கேயோ கிளினிக் வைத்து மருத்துவர்கள் சம்பாதித்து வருகிறார்கள் என்று எல்லாம் விமர்சித்து பேசியிருக்கிறார்.
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு:
இப்படி இவர் பேசி இருந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, தற்போது இந்த வீடியோவிற்கு பதில் கொடுக்கும் வகையில் மருத்துவமனை தரப்பில், மூன்று மருத்துவர்கள் இருக்க வேண்டிய நேரத்தில் இரண்டு மருத்துவர்கள் பணியில் இருந்தார்கள். ஆனால், ஒரு மருத்துவர் மட்டும் தான் தாமதமாக மருத்துவமனைக்கு வந்தார். மூன்று மருத்துவர்கள் சேர்ந்து அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்கள் என்று கூறுகிறார்கள்.