தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் நடந்தது.
https://twitter.com/letscinema/status/1591702245200257026
அதில் தில்ராஜு கலந்துகொண்டு, பொங்கல் மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக அளவில் டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கே திரையரங்குகள் ஒதுக்கப்படுகிறது. நேரடி தெலுங்கு படத்திற்கு வாய்ப்புகள் கிடைக்க திரையரங்கு ஒதுக்கப்படுவதில்லை. இதனால் தெலுங்கு சினிமாவை நிலைநிறுத்த இனிமேல் நேரடி தெலுங்கு படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்
டப்பிங் படங்கள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதை சுட்டிக்காட்டி பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்கவேண்டும் என்றும் டப்பிங் படங்களுக்கு மிச்சமிருக்கும் திரையரங்குகளை ஒதுக்கினால் போதும் என்று அதிரடியாக தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. இதனால் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
https://twitter.com/my_Kollywood/status/1594283493877772289
பான் இந்தியா என வந்துவிட்ட இந்தக் காலத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் இவ்வாறு செய்வது விரும்பத்தகக்து அல்ல என விஜய்க்கு ஆதரவாக குரல்களும் எழுந்துள்ளன. அதே போல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கச் செயற்குழு புதன்கிழமை கூடுகிறது. அதில், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு பற்றி ஆலோசிக்க இருப்பதாகவும் அவர்கள் முடிவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
வாரிசு திரைப்படத்தின் இந்த பிரச்சனையை தொடர்ந்து, வாரிசு படத்திற்கு பல தமிழ் பிரபலங்கள் தங்களின் ஆதரவு குரலை கொடுத்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இயக்குனர் பேரரசு, இயக்குனர் லிங்குசாமி போன்ற பலர் வாரிசு திரைப்படத்தை திட்டமிட்டபடி தெலுங்கில் பொங்கல் அன்று வெளியிட வேண்டும் என்று தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றன.ர் இப்படி ஒரு நிலையில் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு தெலுங்கு திரைத்துறையை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
நான் தெரியாம தான் கேக்குறேன்.. இங்க ஒரு படம் ஹிட் அனால் அந்த கதையை தெலுங்குக்கு வேண்டும் என்றால் கொடுக்கத்தான் போகிறோம். நீங்க ஏன் வாரிசு படத்திற்கு தியேட்டர் இல்லை என சொல்கிறீர்கள்.உங்க படம் மட்டும் பாகுபலி தொடங்கி பரதேசி புலி வரை இங்க வந்திருக்கு. உங்க படம் மட்டும் தமிழ்நாட்டில் ஓடி பெரிய காசு பாக்கலாம். எங்க படம் அங்க ஓட கூடாதா. உங்க படம் வரும்போது ஸ்டே போட்டால் விடுவீங்களா ?மரியாதையா வாரிசு படத்தை ஓட்டுங்க, அப்படி ஓட்டுனாதான் பெருமை" என மிகவும் கோபமாக கஞ்சா கருப்பு பேசி இருக்கிறார்.





