இதனால் தான் அப்படி எழுதினேன் – கஞ்சா பூ கண்ணால பாடல் சர்ச்சைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்ட பாடல் ஆசிரியர்.

0
766
viruman
- Advertisement -

கஞ்சா பூ கண்ணாலே பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் தற்போது அந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடித்து இருக்கிறார். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற கஞ்சா பூ கண்ணாலே பாடலை நீக்க வேண்டும் என்ற சர்ச்சை சோஷியல் மீடியாவில்
வைரலாகி வருகிறது.

- Advertisement -

கஞ்சா பூ கண்ணாலே பாடல்:

இந்த படத்தில் இடம்பெற்ற கஞ்சா பூ கண்ணாலே பாடல் பல மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்த பாடல் வெளியானதை அடுத்து பலரும் இந்தப் பாடலைப் போல் நடனமாடி ரில்ஸ் வீடியோக்களை வெளியிட்டிருந்தார்கள். தற்போது இந்த பாடலை நீக்க வேண்டும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற அமைப்பு வலியுறுத்தி இருக்கிறது. இந்த அமைப்பை நடத்தி வருபவர் ராஜேஸ்வரி பிரியா. இவர் சமூகத்தில் நடக்கும் அநீதிகள் குறித்து சோசியல் மீடியாவில் தன்னுடைய கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

ராஜேஸ்வரி பிரியா வெளியிட்ட அறிக்கை:

இந்த நிலையில் இவர் விருமன் படத்திலிருந்து கஞ்சா பூ கண்ணாலே பாடலை நீக்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பெண்ணின் கண்களை அழகு என்று வர்ணிக்க ஆயிரக்கணக்கான தமிழ் வார்த்தைகள் இருக்கும் போது கஞ்சாப் பூ கண்ணாலே என்று தான் பாடல் எழுத வேண்டுமா???? கஞ்சா போன்ற போதை பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க பல வழிமுறைகள் தேவைப்படுகிறது. அதில் முக்கியமானது போதைப்பொருளை பற்றி நினைவூட்டாமல் இருப்பது ஆகும்‌.

-விளம்பரம்-

கஞ்சா பூ கண்ணாலே குறித்த சர்ச்சை:

கஞ்சாப் பூ என‌ப் பாடல் கேட்டால் திருந்த நினைப்பவன் கூட உடனே கஞ்சாவை தேடி செல்வான். ஏற்கனவே “கஞ்சா வெச்ச கண்” எனப் பாடல் வெளியாகி உள்ளது. அதனை எதிர்த்திருந்தால் திரும்ப இப்படி ஒரு பாடல் வந்திருக்காது .இதனையும் எதிர்க்காவிட்டால் பிற்காலத்தில் கொகைன், அபின் என்று இன்னும் பல போதைப்பொருள் பெயரில் பாடல் வெளியாகத் தொடங்கும். எதை ஒழிக்க வேண்டுமோ அதன்‌ பெயரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உச்சரிக்க வைப்பது உகந்தது அல்ல.

மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர் :

திரைப்படத் துறையினர் மக்கள் நலன்‌ குறித்து சிந்தித்து ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும்‌ அல்லது தணிக்கை குழுவாவது இது போன்ற‌ வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என அறிவிக்க வேண்டும். நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் நான் சொல்ல வரும் கருத்தினை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். கலைத்துறையை நேசிப்பவள் நான். ஆனால், சமூகம் போதைக்கு அடிமையாக மாறி வரும் நிலையில் இதனை தவிர்க்கலாம் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில்இந்த பாடல் தவறான புரிதல் ஏற்படுத்தியிருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக விருமன் பட பாடலாசிரியர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

Advertisement