கண்மணி- அஸ்வத் தம்பதிக்கு அழகான குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருந்த தொடர்களில் ஒன்று ரேட்டிங்கில் ‘பாரதி கண்ணம்மா’. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து முடியும் வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்றது. இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.

அதேபோல் இந்த சீரியலில் நடித்த சில நடிகர்கள் சினிமாவில் பிசியாக நடித்து இருந்தார்கள். மேலும், பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுக்கு வில்லியாகவும், தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ‘கண்மணி மனோகரன்’. இவர் ஆரம்பத்தில் சீரியலில் வில்லத்தனங்கள் செய்து பின் பாசிட்டிவாக இவருடைய கதாபாத்திரம் மாறி இருந்தது. இந்த சீரியலின் மூலம் தான் கண்மணி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இருந்தும் இந்த சீரியலில் இருந்து இவர் பாதியிலேயே விலகிவிட்டார்.
கண்மணி நடித்த சீரியல்கள்:
அதன் பின் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த ‘அமுதாவும் அன்னலட்சுமி’ என்ற தொடரில் ஹீரோயினியாக நடித்திருந்தார். இந்த சீரியலும் சீக்கிரமாகவே முடிந்தது. அதற்கு பின் இவர் பெரிதாக எந்த சீரியலிலும் கமிட்டாகவில்லை. அதோடு இவர் சினிமாவில் முயற்சித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன் பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார்.
கண்மணி-அஸ்வத் திருமணம்:
இதனிடையே சீரியலில் அவர்கள் சன் டிவி தொகுப்பாளர் ‘அஸ்வத்’ என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார். பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவராக அஸ்வத் திகழ்கிறார். இவர் சன் டிவியில் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். அதற்கு பின் இவர் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், இவர் இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கி தந்திருந்தது. இதை தொடர்ந்தும் இவர் உருவாக்கி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

கண்மணி வளைகாப்பு:
பின் கண்மணி-அஸ்வத் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள். கடந்த ஆண்டு தான் இவர்களுடைய நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றது. அதன் பின் இவர்களுடைய திருமணம் கோலாகலமாக மகாபலிபுரத்தில் நடைபெற்றிருந்தது. இந்த திருமண விழாவில் வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகர்களும் கலந்து கொண்டு வாழ்ந்திருந்தார்கள். சில மாதங்களுக்கு முன் கண்மணி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்து இருந்தார். பின் தன்னுடைய மனைவி கண்மணிக்கு அஸ்வத் ஒன்பதாவது மாத வளைகாப்பை எளிமையாக கொண்டாடி இருந்தார்.
View this post on Instagram
கண்மணி குழந்தை:
இப்படி இருக்கும் நிலையில் கண்மணிக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கண்மணி- அஸ்வந்த் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதனை இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தோஷமாக பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் அவர்கள், நாங்கள் இருவரும் இணைந்து ஒரு காதல் கதை எழுதினோம். வாழ்க்கை எங்களுக்கு அந்த காதல் கதையின் தொடர்ச்சியை அருளி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இனி எங்களின் பயணம் இந்த செல்லக்குட்டியுடன் சுவாரசியமானதாக இருக்கப்போகிறது என்று கூறியிருக்கிறார்கள். இதை பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்






