கண்மணி சீரியலில் நடித்த சௌந்தர்யா மீண்டும் சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி சீரியல் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகத்தில் வருவது சன் டிவி சேனல் தான். ஏன்னா, சீரியல் என்ற ஒன்னு ஆரம்பித்ததே சன் நிறுவனம் தான். மேலும், சன் டிவியில் ஒளிபரப்பாகு சீரியல்கள் எல்லாமே ‘செம மாஸ்’ காட்டி வருகிறது என்று கூட சொல்லலாம். பொதுவாகவே சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் இல்லத்தரசிகளின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று நீண்ட வெற்றி தொடராக இருக்கிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு சூப்பர் ஹிட்டான சீரியல் கண்மணி.
இந்த சீரியலில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ் கதாநாயகனாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் லீஷா எக்லர்ஸ் நடித்திருந்தார். மேலும், இவர்களுடன் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் நடித்து இருந்தார். இந்த சீரியல் தொடங்கியதிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. பின் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் சின்னதிரை சீரியல் எல்லாம் நிறுத்து வைக்கப்பட்டது. அப்போது பல்வேறு காரணங்களால் பல சீரியல்கள் பாதிலேயே முடிக்கப்பட்டது. அதில் கண்மணி சீரியலும் ஒன்று.
லீஷா எக்லர்ஸ் பற்றிய தகவல்:
கண்மணி சீரியல் பாதிலேயே நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் பலரும் வருத்தத்தை தெரிவித்து இருந்தார்கள்.
மேலும், கண்மணி சீரியலில் கதாநாயகியாக நடித்த லீஷா எக்லர்ஸ் பற்றி இங்கு பார்க்கலாம். நடிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். இருந்தாலும் இவர் 1993ம் ஆண்டு சென்னையில் தான் பிறந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் சென்னையிலுள்ள எத்திராஜ் கல்லூரியில் தன்னுடைய படிப்பை படித்து முடித்தார். எல்லாரும் படித்து முடித்து செய்வது போல லீஷாவும் மாடலிங் செய்ய தொடங்கினார்.
லீஷா எக்லர்ஸ் நடித்த படங்கள்:
பின் லீஷா மாடலிங் செய்ய தொடங்கியவுடன் சினிமா துறையில் இருந்து பட வாய்ப்புகள் நிறைய வந்தன.
ஆனால், அவர் முதலில் படத்தில் நடிக்க விருப்பமில்லை என கூறியிருந்தார். பின் அவர் படங்களில் நடிக்கத் தொடங்கினார். லீஷா எக்லர்ஸ் அவர்கள் எம்.சசிகுமார் தயாரிப்பில், பி.சோலை பிரகாஷ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பலே வெள்ளைய தேவா’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் இந்த படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பொது நலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.
லீஷா எக்லர்ஸ் நடித்த கண்மணி சீரியல்:
இப்படி லீஷா எக்லர்ஸ் இவ்வளவு திரைப்படங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை.
அதற்கு பிறகு தான் இவர் சின்னத்திரையில் ஹிட் ஆன கண்மணி சீரியலில் நடித்தார். மேலும், இவர் திரைப் படங்களில் தொடர்ச்சியாக நடித்துக்கொண்டு வந்திருந்தாலும் சீரியலில் சஞ்சீவ்க்கு ஜோடியாக நடித்து தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் கண்மணி சீரியலுக்கு பிறகு எந்த சீரியலில் நடிக்க வில்லை. இருந்தாலும் இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டிருந்தார்.
லீஷா எக்லர்ஸ் ரீ என்ட்ரி கொடுக்கும் சீரியல்:
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லீஷா எக்லர்ஸ் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல் அம்மன். தற்போது இந்த தொடரின் மூன்றாம் அத்தியாயத்தில் லீஷா எக்லர்ஸ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அம்மன் 3 சீரியல் கலர்ஸ் தமிழில் திங்கள் முதல் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தற்போது லீஷா எக்லர்ஸ் சீரியலில் நடிக்க போற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளார்கள்.