கண்மணி சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை போட்ட செம குத்தாட்டம் – வீடியோ இதோ.

0
3833
leesha
- Advertisement -

தொலைக்காட்சி சீரியல் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகம் வருவது சன் டிவி சேனல் தான். ஏன்னா,சீரியல் என்ற ஒன்னு ஆரம்பித்ததே சன் நிறுவனம் தான். மேலும், பல ஆண்டுகளாகவே சன் டிவியில் ஒளிபரப்பாகு சீரியல்கள் எல்லாமே ‘செம மாஸ்’ காட்டி வருகிறது என்று கூட சொல்லலாம். அது மட்டும் இல்லைங்க சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பல குடும்ப தாய்மார்களிடையே அதிக வரவேற்பை பெற்று வெற்றி தொடர்களாக போய்க்கொண்டு உள்ளது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘கண்மணி’ சீரியல் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்று வருகிறது. இந்த கண்மணி சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் லீஷா எக்லர்ஸ் என்பவர் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகின்றது.நடிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு இருந்தாலும் இவர் 1993ம் ஆண்டு சென்னையில் தான் பிறந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் சென்னையிலுள்ள எத்திராஜ் கல்லூரியில் தன்னுடைய படிப்பை படித்து முடித்தார். எல்லாரும் படித்து முடித்து செய்வதுபோல லீஷாவும் மாடலிங் செய்ய தொடங்கினார்.

- Advertisement -

லீஷா எக்லர்ஸ் அவர்கள் எம்.சசிகுமார் தயாரிப்பில்,பி.சோலை பிரகாஷ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பலே வெள்ளைய தேவா’என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும், இவர் இந்த படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பொது நலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ‘கண்மணி ‘ சீரியல் தான். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் நடிகை லிசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாமி படத்தில் வரும் ‘கல்யாணம் தான் கட்டிக்கிட்டு’ பாடலுக்கு இடுப்பில் புடவையை சொருகிக்கொண்டு செம குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

-விளம்பரம்-
Advertisement