சத்தமில்லாமல் திடீர் திருமணம் செய்த கண்மணி சீரியல் நடிகை – வெளியான திருமண வீடியோ இதோ.

0
422
sambhavi
- Advertisement -

பொதுவாகவே ரசிகர்கள் சினிமா முதல் சின்னத்திரை பிரபலங்களை குறித்து ஏதாவது ஒரு செய்தி கிடைத்தால் போதும் அதை சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருவார்கள். அதிலும் பிரபலங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்தநாள் கொண்டாட்டம் என எந்த ஒரு விசேஷம் நடந்தாலும் போதும் ரசிகர்களும், நெட்டிசன்களும் அதை சோசியல் மீடியாவில் ஜெட் வேகத்தில் வைரல் ஆக்கி விடுகிறார்கள். அதிலும் சமீப காலமாக சின்னத்திரை பிரபலங்கள் பலரும் யாருக்கும் தெரியாமல் சத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் சன் டிவி நடிகை ஒருவர் சத்தமில்லாமல் யாருக்கும் தெரியாமல் திடீர் திருமணம் செய்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் வேற யாரும் இல்லைங்க, கண்மணி சீரியல் நடிகை சாம்பவி. 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் தான் கண்மணி. இந்த தொடரில் பூர்ணிமா, சஞ்சீவ், லீசா, சாம்பவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த தொடர் ஒளிபரப்பான நாள் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

கண்மணி சீரியலில் சாம்பவி:

பின் கொரோனா தொற்றின் காரணமாக இந்த சீரியல் பாதியிலேயே நின்று போனது. இதனால் ரசிகர்கள் பலரும் வருத்தத்தை தெரிவித்து இருந்தார்கள். மேலும், இந்த தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சாம்பவி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார். பின் சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி தொடரில் முத்துச்செல்வி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சாம்பவி.

சாம்பவி நடிக்கும் சீரியல்:

பின் இந்த சீரியல் பாதியில் நின்றதால் சாம்பவி தமிழ் சீரியலில் இருந்து தெலுங்கு சீரியலுக்கு இடம் பெயர்ந்தார். தற்போது இவர் ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி வரும் சாதனா என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த தொடர் தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் தொடரின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் கயல் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

திடீர் திருமணம் செய்த நடிகை சாம்பவி:

மேலும், இந்த தொடரில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இவருடன் சஞ்சீவ் நாயகனாக நடிக்கிறார். மேலும், இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி நடிக்கும் கதாபாத்திரத்தில் தான் தெலுங்கில் சாதனா சீரியலில் சாம்பவி நடித்து வருகிறார். தெலுங்கில் இந்த சாதனா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாம்பவி யாருக்கும் தெரியாமல் திடீர் திருமணம் செய்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சாம்பவி அவர்கள் பிரசன்னா என்பவரை பிப்ரவரி 11ஆம் தேதி திருமணம் செய்திருக்கிறார். எந்த ஒரு அறிவிப்பும் எதுவுமில்லாமல் திடீர் திருமணம் செய்திருக்கிறார்.

இன்ஸ்டாவில் திருமண வீடியோவை பதிவிட்ட சாம்பவி:

தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் திருமண வீடியோவை சாம்பவி பதிவிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்களும், சின்னத்திரை நண்பர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். மேலும், இவர்களுடைய திருமணம் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் முன்னிலையில் எளிமையாக நடைபெற்று இருக்கிறது. இதேபோல் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் நிறைய சின்னத்திரை நடிகர் நடிகைகள் சத்தமே இல்லாமல் திருமணம் செய்திருக்கிறார்கள். ஷபானா-ஆர்யன், ரேஷ்மா-மதன், ஸ்ரேயா-சித்து,தீபக்-அபிநவ்யா இவர்களை தொடர்ந்து தற்போது புதிய ஜோடிகளாக சாம்பவி- பிரசன்னா திகழ்கிறார்கள்.

Advertisement